என் மலர்
தஞ்சாவூர்
- கூட்டத்தில் பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
- கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்கு மாங்குடி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வடக்கு மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர்கள் விவசாயிகள், என பலரும் கலந்து கொண்டனர்.
- போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
- விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்த கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கையில் எண்ணெய் சட்டி மற்றும் கரண்டியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் . இதனை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து எண்ணெய் சட்டி, கரண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த ஆண்டு காவிரி நீர் இல்லாமல் குறுவை, சம்பா பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக மத்திய , மாநில அரசு அறிவித்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மின்மோட்டார் மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்மனை மின்சாரம், 20 மணி நேரம் தடையில்லாமல் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு ரமேஷ் உள்பட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ள நிலையில் போதிய தண்ணீர் இன்றி காய்ந்து நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகளுக்கும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
- மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
- மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தஞ்சாவூர்:
திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 39). இவர் ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறை க்காக துரைரா ஜன் திருச்சிக்கு வந்தார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு சென்றார். இதையடுத்து அங்கிருந்து திருச்சிக்கு அதே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
தஞ்சை அருகே அருள்மொழிபேட்டை - மாரியம்மன் கோவில் புறவழி சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருக்கிறது. அப்போது எதிரே தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துரைராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கண்முன்னே கணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.
சுவாமிமலை:
தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார்.
- அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் அ.அப்பாஸ் (வயது 51). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று புதுக்கோட்டை செல்வதற்காக ஆடுதுறையில் இருந்து ரெயிலில் ஏறி தஞ்சாவூரில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்காக இரவில் மேரீஸ் கார்னர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார் . இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து இறங்கினர்.
பின்னர் அப்பாஸை கத்தியை காட்டி மிரட்டி பணம் கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனே நான்கு பேரும் சேர்ந்து அப்பாஸின் சட்டைப்பாக்கட்டில் இருந்து ரூ.6500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அப்பாஸ் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர் . இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
- இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் மனு கொடுக்க வரும் பொதுமக்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலை தங்களது உடலில் ஊற்றிக் கொள்கின்றனர். இவர்களைக் போலீசார் மீட்டு, தற்கொலையிலிருந்து காப்பாற்றி அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் கொண்டு வரும் குடிநீர் பாட்டில்களை போலீசார் பரிசோதித்து உள்ளே அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு கொடுக்க வந்த பெண், கலெக்டர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டார். இதுபோல இந்த மாதத்தில் மட்டும் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால், குடிநீர் பாட்டில் என்ற பெயரில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் நிரப்பி எடுத்துக் கொண்டு உள்ளே செல்வதைத் தடுக்க இன்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கொண்டு வந்த குடிநீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ஓரமாக அடுக்கி வைத்தனர். பின்னர் மனு கொடுத்த பின்னர் வீட்டுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது குடிநீர் பாட்டில்களை மீண்டும் எடுத்துச் சென்றனர்.
- திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
- எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
தஞ்சாவூர்:
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பொதுக்கூட்டம் நடத்தியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் வரும் 4-ம் தேதி (சனிக்கிழமை) மாலையில் திலகர்திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
இதனை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஏற்பாடுகளை அ.தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 4-ந் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் தஞ்சை திலகர் திடலில் இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார்.
விழாவில் பந்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அனைவரும் இணைந்து பந்தக்கால் நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஆர்.காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், கரந்தை பஞ்சு, மருத்துவ கல்லூரி பகுதி நிர்வாகி மனோகர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், கவுன்சிலர்கள் கோபால், காந்திமதி, மகளிரணி சித்ரா அங்கப்பன், நிர்வாகி முத்துமாறன், முன்னாள் மாவட்ட அம்மா பேரவை துணை தலைவர் ரெங்கப்பா, திராவிட கூட்டுறவு வங்கி இயக்குனர் மகேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அம்மா பேரவை துணை தலைவர் பாலை ரவி, ரெங்கப்பா, கேபிள் செந்தில், தென்னரசன், பிள்ளையார்பட்டி சந்தானம், கடகடப்பை ராஜா, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி ஸ்டாலின் செல்வராஜ், ஐ.டி.விங்க் நடராஜன், மனோ சுப்பிரமணியன், பாண்டியன், முருகேசன், வெங்கடேஸ்வரன், பிரகதீஸ், சித்தார்த்தன், மாணவரணி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
- கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கீழ் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை ) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீா்ப்பாசனம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். இதில், கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- ஒரே நாளில் 244 மி.மீ. மழை கொட்டியது.
- நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலையில் குளிர்ந்த காட்சி வீசியது. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டியது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
பின்னர் இரவு முழுவதும் குளிர்ந்த காட்சி வீசி கொண்டிருந்தது.
இதே போல் வல்லம், திருவையாறு, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, வெட்டிக்காடு, திருவிடைமருதூர், அதிரா ம்பட்டினம் ,பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தன. ஒரே நாளில் 244.50 மி.மீ. மழை அளவு பதிவானது. இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு ;-
திருவிடைமருதூர்-16.60, வெட்டிக்காடு-16.40, ஒரத்தநாடு-15, திருக்காட்டுப்பள்ளி- 14.40, ஈச்சன்விடுதி - 10.20, கும்பகோணம் -9.60, தஞ்சாவூர் -8, திருவையாறு -7 ஆகும்.
- போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், புகையிலை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, இராஜகிரியில் அமைந்துள்ள முக்கிய வீதிகளின் வழியாக புகையிலை மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி, பேரணியாக சென்று, போதைகளின் தீமைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆக்கிரமிப்பு நிலம் கோவிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
- இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடி ஆகும்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை காசாங்குளம் மேல்கரையில் உள்ள விஸ்வநாதசாமி கோவிலுக்கு சொந்தமான, பட்டுக்கோட்டை , காசாங்கு ளம் கீழ்க்கரை பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 811 சதுர அடி பர ப்பளவு இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணை யர் ஞானசேகரன் மற்றும் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா தலைமையில், தஞ்சாவூர் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் சங்கர், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாஷ் பரம்பரை அறங்காவலர் கட ம்பநாதன், திருக்கோயிலின் செயல் அலுவலர் சுந்தரம் கணக்கர் ரெங்கராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்களின் முன்னிலையில் ஆக்கிரமி ப்பு நிலம் மீட்கப்பட்டு அங்கு நிரந்தர அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் திருக்கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5.14 கோடிகள் என இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.






