search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

    • இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.
    • சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    இப்பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவ- மாணவியர் கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர்.

    இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக எலிசா நகர் வரை சென்று மீண்டும் மன்னர் சரபோஜி கல்லூ ரியில் நிறைவடைந்தது.

    முன்னதாக கலெக்டர் கூறும்போது:-

    மாணவர்கள் அனைவரும் ஹெல்மெட் பயன்படுத்து கிறார்களா? எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் கட்டுமானம் (ம) பராமரிப்பு செந்தில்குமார், சாலை பாதுகாப்பு அலகு திருச்சி கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர்கள் கீதா, செந்தில்குமார், பிரமிளா, விஜயகுமார், பானுதாசன், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் மோகனா, கணேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×