என் மலர்
தஞ்சாவூர்
- போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
- தொழில்நுட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரை சேர்ந்தவர் டாக்டர் பிரபாகரன். இவர் மருத்துவத்தில் பிஎச்.டி. முடித்து விட்டு தற்போது தென்கொரியாவில் உள்ள சியோங்ஜு மாகாணம் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் கதிரியக்க புற்று நோயியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாகாண காவல்துறை நிர்வாகத்திற்கு, குறிப்பாக குற்றங்களைத் தடுப்பதில் சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக மதிப்புமிக்க "சிறந்த குடிமகன் விருது" இவருக்கு கிடைத்துள்ளது. கொரிய குடியரசின் சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்நிலையத்தில் 78-வது போலீஸ் தின கொண்டாட்டத்தின் போது குரல்ஃபிஷிங்கிற்கு எதிராக இவர் தன்னார்வத் தொண்டு புரிந்தார். இந்த பங்களிப்பிற்காக கொரிய தேசிய போலீஸ் ஏஜென்சியில் இருந்து சிறந்த குடிமகன் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.
சியோங்ஜு ஹங்தோக்கூ காவல்துறை தலைவர் ஹாங்சி யோக்ஜி, துணை காவல் ஆணையர் ஆகியோரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழும் நினைவுப்பரிசும் டாக்டர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டது.
விருதுக்காக பரிந்துரை செய்த வெளியுறவுப் பிரிவின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் லீசியோஹூன்கிற்கு டாக்டர் பிரபாகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
டாக்டர் பிரபாகரன் கடந்த 2012-ம் ஆண்டு முதல் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் அமைப்பு தலைவராக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குரல்ஃபிஷிங்தடுப்பு, போதை மருந்து தடுப்பு ஆகிய பிரச்சார இயக்கங்களில் இணைந்து தன்னார்வ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார் .
அது மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு இந்திய தூதரகத்துடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக தென் கொரியா சென்றபோது தன்னார்வலராக பணி செய்தார்.
கடந்த 2009-ம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உயிர் தொழில்நு ட்பவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
- உள்ளூர் நீர் ஆதாரத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திருவாரூர் ஊரக குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை-கன்னியா குமரி தொழிற்தட சாைல விரிவாக்கத்தினால் கும்பகோணம்-மன்னார்கு டி சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட பிரதான நீர் உந்து குழாயினை மாற்றி அமைக்கும் பணி முடிவடைந்து குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும்.
எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி குடிநீரை சேமித்து வைத்து க்கொ ள்ளவும், உள்ளூர் நீர் ஆதா ரத்தினை பய ன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ள ப்ப டுகி றார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.
- 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
- பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
மதுக்கூர்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை பார்த்தவர்களுக்கு மாதக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்காத பாஜக அரசை கண்டித்தும், சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியக் குழு சார்பில், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனுக்கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.
முடிவில் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.
காத்திருப்பு போரா ட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதக் கணக்கில் வேலை பார்த்தவர்களுக்கு முறையாக சம்பளங்கள் வழங்கப்படாமல் உள்ளது.
அதனை உடனடியாக வழங்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
- சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சுவாமிமலை:
சுவாமிமலையில் உள்ள உலோக சிலை கைவினை கலைஞர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி க்குழு துணை தலைவரும், கும்பகோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துச்செல்வன் தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனரும், சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக செயல் ஆட்சியருமான விஜயகுமார், மாவட்ட தொழில் மைய உதவி பொறி யாளர் கார்த்திகேயன், சுவாமிமலை தி.மு.க. பேரூர் செயலாளர் பாலசுப்ர மணியம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. பேரூர் துணை செயலாளர் கோபால், சுவாமிமலை முன்னாள் பேரூராட்சி தலைவர் தேவ. ராதாகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரை குணாளன், ஜெமினி, லட்சுமி பிரியா மற்றும் சம்பத் சுப்பிரமணியன், கோபால் மற்றும் சுவாமிமலை உலோக விக்ரக உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.
- மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கலைவேந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நாளை (வியாழக்கிழமை) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்புர், திருக்கானூர்பட்டி, வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, பறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, பகுதி அலுவலகங்களைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மேற்கண்ட குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 12 கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
- சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பூக்கார த்தெருவில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இங்கு வள்ளி தேவசேனா சமேதராக சுப்பிரமணிய சுவாமி மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இங்கு மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் அன்றும் வளர்பிறை சஷ்டி அன்றும் சிறப்பு வழிபாடு நடை பெறுவது வழக்கம்.
தொடர்ந்து 12 கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகனை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத கார்த்திகை நட்சத்தி ரத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளி த்தார். கோவில் உட்பிரகா ரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பருவத்தில் 78486 எக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 71412 எக்டர் பரப்பளவில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.
மேட்டூர் அணையில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தால் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்படைந்த 55.71 எக்டர் குறுவை பரப்பிற்கான கணக்கெடுப்பு பணி வேளாண்மை மற்றும் வருவாய் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அறிக்கை பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் தற்போது வரை 55161 எக்டர் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களுக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 873 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது என்று வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆய்வுகள் பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் தஞ்சை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.இதையடுத்து கலெக்டர் முன்னிலையில் மாணவர்கள் தாங்கள் செய்த ஆய்வுகளை விளக்கிப் பேசி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறினர். தங்கள் ஆய்வுகளை பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஹேமலதா துவக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் ராஜசேகர் , பேராசிரியர் மாரியப்பன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணை ப்பாளர் முனைவர் ராம்மனோகர் ஆகியோர் ஆய்வுகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக பயிற்சியளித்தனர்.
இதில் 50 -க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவியர்கள் 600 தலைப்புகளில் ஆய்வுகட்டுரை சமர்பித்தனர்.
இதிலிருந்து சிறந்த 60 ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 4-ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுகுமாரன், ஆய்வின் நோக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கௌரவத் தலைவர் கார்த்திகேயன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலர் ஸ்டீபன்நாதன் வாழ்த்துரை வழங்கினார்.
மண்டல மாநாட்டில் பங்கேற்க உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு மாவட்டக்கருவூல அலுவலர் கணேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநாட்டில் பங்கேற்ற பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.
தஞ்சை மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தியாகராஜன், செந்தில்குமார், பட்டுக்கோட்டை கிளைசெயலர் செந்தமிழ் செல்வி, மாத்தூர் கிளை சுகந்தி, மாத்தூர் கிழக்கு ஊராட்சிமன்ற தலைவரும் அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைச்செயலருமாகிய மஞ்சுளா, அரியலூர் மாவட்டச்செயலர் ஞானசேகர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
விலங்கியல் துறைத்தலைவர் சந்திரகலா, தமிழ்த்துறையை சார்ந்த பேராசிரியர் தமிழடியான் மற்றும் கல்லூரியின் அனைத்து துறையை சார்ந்த பேராசிரியர்களும் நடுவர்களாக பணியாற்றி மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சியை கல்லூரி மாணவி பார்வதி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி முடிவில் மாவட்டத்துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.
- தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் தலைமையகத்தில் லஞ்ச ஒழிப்பு நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர் மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.
அரசு குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றம் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்று அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல பொதுமேலாளர்கள் இளங்கோவன் (கும்பகோணம்), சக்திவேல் (திருச்சி), சிவசங்கரன் (கரூர்), சிங்காரவேல் (காரைக்குடி), இளங்கோவன் புதுக்கோட்டை), முதன்மை கணக்கு அலுவலர் சிவக்குமார், துணை மேலாளர்கள் முரளி, கணேசன், உதவி மேலாளர்கள் வடிவேல், ராஜசேகர், கலைவாணன், நாகமுத்து மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
- தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
- இதில் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய அரசு கலாச்சா ரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன் முன்னிலையிலும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 75-க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நல சங்கம் மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞர் நகரிலிருந்து தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம் ஓடி வந்தனர்.
பின்னர் தென்னகப் பண்பாட்டு மையம் வந்தடைந்தவுடன் மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் சான்றிதழ் வழங்கினார்.
- சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும்.
- இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
தஞ்சாவூர்:
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட், வேளச்சேரி, விஜயவாடா கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக சில ரெயில்கள் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து தினமும் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை (ராக்போர்ட்) அதிவிரைவு ரெயிலானது (வண்டி எண்.12653) நாளை முதல் 3-ம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து மேற்கண்ட நாள்களில் இரவு 12.10 மணிக்குப் புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர்- மன்னார்குடி மன்னை விரைவு ரெயிலானது (வண்டி எண்.16179) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 க்குப் புறப்படும் சென்னை எழும்பூர் -மங்களூர் விரைவு ரெயிலானது (16159) நாளை முதல் 3 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும்.
காரைக்குடி - சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் அதிவிரைவு ரயில்களானது (12605, 12606) இன்று (செவ்வாய்க்கிழமை) தாம்பரம்- சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரெயிலானது தாம்பரத்திலிருந்து இன்று மாலை 4.15 மணிக்குப் புறப்படும். மேற்கண்ட தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக தகர கொட்டகை அமைக்கப்பட்டது.
- போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்த பள்ளி 2 கட்டிடங்கள் மூலம் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பழுது காரணமாக இடிக்கப்பட்டது.
மீதம் இருந்த ஒரு கட்டிடம் கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தின் போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.மாணவர்களுக்கு விடுமுறை என்பதால் அசம்பாவிதம் இல்லை.
இரண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கொட்டகையில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 63 பேரும் நெருக்கடியில் இருந்து வருகின்றனர்.
தற்போது மழை காலத்தில் சாரல் விழுவதால் மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் செய்து வந்தனர்.
தகவறிந்து நேரில் வந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், காவல் ஆய்வாளர் காவேரி சங்கர் விரைவில் பள்ளி கட்டிடம் கட்டி தரப்படும் என உறுதி கூறினர்.
இருப்பினும் பெற்றோர்கள், மாணவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.






