1000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு

சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.
1000 டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு
Published on

தஞ்சாவூர்:

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களி ல் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் அரவைக்காக திருநெல்வேலி , திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com