search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cymbal"

    • காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.
    • இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிக் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இன்று குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட் தலைவர் முகமது சாபீர் ஒருங்கிணைத்தார்.

    இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாண விகள் கலந்து கொண்டு இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.

    இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது. சிலம்பம் சுற்றியவர்களை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.

    மேலும் அவர் சாதனை படைத்த தற்கான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் நவ பாரத் மெட்ரிக் பள்ளி பிரின்சிபல் ஜான்சன், அட்மினேஸ்டர் குணாசிங், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சீப் ஆப்பரேட்டிங் ஆபிஸர் வினோத், தீர்ப்பாளர் பரத் குமார், கேரளா யு.எஸ்.எம்.ஏ. கிராண்ட் மாஸ்டர் குங் நியாஸ், பொதுச் செயலாளர் மார்க்கர், ஏ.ஐ.கே.ஏ. துணைத் தலைவர் ரெனால்ட் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் பி.கே.சி வீர சிலம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரத்தை சேர்ந்த 38 மாணவர்கள் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை பிரிவில் கலந்து கொண்டு 11 முதல் பரிசு கோப்பையும், 14 இரண்டாம் பரிசு கோப்பையும், 13 மூன்றாம் கோப்பையையும் வென்று முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    பசும்பொன்

    கமுதி அருகே அபிராமத்தில் உள்ள டி.எம்.அகடாமியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் சிலம்பம்,கராத்தே, பரத நாட்டியம்,கேரம், சதுரங்கம், ஓவியம் உட்பட பல்வேறு பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேவகோட்டையில், நடைபெற்ற சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அபிராமம் டி.எம்.அகடாமி சார்பில் கலந்து கொண்ட 80 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவர்களை டி.எம்.அகாடமி நிறுவனர் மீனலோசனி மற்றும் சிலம்பம் பயிற்றுனர் ஆறுமுகம் ஆகியோரை பாராட்டினர். மேலும் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    • 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர் சாதனை படைத்தார்.
    • இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனை மற்றும் கனி சிலம்ப விளையாட்டு, சிலம்பக்கலை அகாடமி இணைந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி செய்யாலூர் ஆர்.கே.சாமி கல்லூரியில் நடந்தது.

    சிலம்ப விளையாட்டுப் பள்ளியின் நிறுவனர் அகமது மரைக்கா, கனி சிலம்பப்பள்ளி நிறுவனர் வரிசை கனி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 3 மணிநேரம் உலக சாதனைக்காக 6 பள்ளி களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.

    ராமநாதபுரம் முஹம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஹாலித், ஆர்.கே. சாமி கல்லூரியில் இருந்து நல்லாங்குடி கிராமம் வரையிலும், பின்னர் நல்லாங்குடியில் இருந்து ஆர்.கே.சாமி கல்லூரி வரையிலும் மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் சுற்றியபடி சாதனை படைத்தார்.

    இந்த மாணவருக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பூரை சேர்ந்த சோழன் சிலம்பம் மற்றும் விளை யாட்டு அகாடமி மாண வர்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.

    • 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
    • என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக நீலமேகம் மற்றும் அவரது மனைவி கவிதா அதே பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகின்றனர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாநில மாவட்ட கருத்தாளராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில், ஆயிரக்கணக்கான பொருட்களை வைத்து எண்ணும் எழுத்தும் பயிற்சி மேற்கொண்ட ஆசிரியர் தம்பதியினரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்விக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

    இந்நிலையில், இப்பள்ளி யில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோடியக்காடு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் ஆசிரியர்கள் குணசுந்தரி, சாந்தி, கவிதா, மணிமாலா, புஷ்பா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மீனாம்பாள், தாமரைச்செ ல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 1 முதல் 3 வரை பயிலும் மாணவர்களால் என் மேடை என் பேச்சு, செய்தித்தாள் வாசித்தல் போன்ற நிகழ்ச்சியும், 5-ம் வகுப்பு மாணவர்களால் கரகம் மற்றும் சிலம்பம் சுற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி பரிசு வழங்கினார்.

    முடிவில் ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.

    • குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,

    மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,

    நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருச்செங்கோடு குமரமங்கலம் மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    இந்த மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்குபெற்றனர். சிலம்ப போட்டியை மஹேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் ஸ்டாலின் பாக்கியநாதன் தொடங்கி வைத்தார்.

    வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் கோகிலா மற்றும் திருச்செங்கோடு திமுக நகர செயலாளர் தாண்டவன் கார்த்திக்கேயன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.

    மேலும் மாவட்ட போட்டியில் வெற்றிபெற்று முதல் இடம் பிடித்த மாணவ -மாணவியர்கள் அனைவரும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் நடத்தும் மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் -வீரங்கனைகளுக்கு நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    விழா முடிவில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கத்தின் செயலாளர் நவீன்குமார் நன்றி தெரிவித்தார்.

    • அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    சேலத்தில் அகில இந்திய சிலம்ப போட்டி நடந்தது. இதில் 700 பேர் கலந்துகொண்டனர். இதே போல் ஈரோடு சிஎஸ்ஐ அரங்கத்தில் ஈரோடு ஓபன் கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சிலம்ப போட்டியில் எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக 11 மாணவர்கள் கலந்துகொண்டனர். வெவ்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சூரியா, சர்வேஷ், அபிநயா, துர்கா  முதல் பரிசையும் குமரவேலு, பாலாஜி, வெற்றிவேலன் 2-ம் பரிசையும், 4 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    இதே போல் ஓபன் கராத்தே போட்டியில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பாக அகாடமி மாணவர்கள் 18 பேர் கலந்து கொண்டனர். இதில் பவித்ரா தேவி முதல் பரிசையும், கனிஷ்கா, சந்தோஷ் 2-ம் பரிசையும் 17 மாணவர்கள் 3-ம் பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பெரிய செங்குந்தர் மண்டபத்தில் நடந்தது. ஜான்சன்ஸ் நிறுவனங்களின் தலைவரும் செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தலைவருமான ஜான்சன்ஸ் நடராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு எட்ரனல் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் சிந்தியா பாபு தலைமை வகித்தார். வக்கீல் ஜனார்த்தனன், ஹைடெக் ரோட்டரி சங்கத்தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

    ×