சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர். மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சிலம்பம் ேபாட்டியில் மாணவர்கள் சாதனை
Published on

ராமநாதபுரம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் பி.கே.சி வீர சிலம்பக் கழகம் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த 38 மாணவர்கள் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை பிரிவில் கலந்து கொண்டு 11 முதல் பரிசு கோப்பையும், 14 இரண்டாம் பரிசு கோப்பையும், 13 மூன்றாம் கோப்பையையும் வென்று முதல் 3 இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், திருமுருகன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com