சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர். சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
Published on

பசும்பொன்

கமுதி அருகே அபிராமத்தில் உள்ள டி.எம்.அகடாமியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் சிலம்பம்,கராத்தே, பரத நாட்டியம்,கேரம், சதுரங்கம், ஓவியம் உட்பட பல்வேறு பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேவகோட்டையில், நடைபெற்ற சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் அபிராமம் டி.எம்.அகடாமி சார்பில் கலந்து கொண்ட 80 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவர்களை டி.எம்.அகாடமி நிறுவனர் மீனலோசனி மற்றும் சிலம்பம் பயிற்றுனர் ஆறுமுகம் ஆகியோரை பாராட்டினர். மேலும் சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com