search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddy bundles"

    • சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு அங்கேயே அடுக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை, பிள்ளையார்பட்டி, புனல்குளம், அம்மன்பேட்டை ஆகிய இடங்களி ல் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும்.

    இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொது வினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலை களுக்கும் அனுப்பப்படும்.

    இந்தநிலையில் இன்று சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த லாரிகள் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் ஏற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து தலா 1,000 டன் நெல் வீதம் அரவைக்காக திருநெல்வேலி , திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபி,

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்பட்டு அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன கால்வாய்கள் மூலம் திறக்கப்படுகிறது.

    இவ்விரு கால்வாய்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், செங்கரை, மோதூர், பிள்ளையார் கோவில் துறை,வாணிபுத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நெல் அறுவடை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கொண்டு செல்ல போதுமான வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கின்றன.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை உடனுக்குடன் லாரிகள் மூலம் பாதுகாப்பான இடத்தில் வைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×