என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி கிரிக்கெட் போட்டி
    X

    நிகழ்ச்சியில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. கிரிக்கெட் விளையாடினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி கிரிக்கெட் போட்டி

    • போட்டியில் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    அனைத்திந்திய சட்ட உரிமைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அணி இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி இன்று தஞ்சாவூர் ஐ.டி.ஐ மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சாலமன் இன்பராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

    எஸ். எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி. கே. ஜி .நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் அந்தோணி நிறைவுறையாற்றினார்.

    தஞ்சாவூர் மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த போட்டியில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×