search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் தொடங்கியது
    X

    மாவட்டத்தில் வாக்காளர் சேர்ப்பு முகாம் தொடங்கியது

    • 2 ஆயிரத்து 308 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
    • வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காதவர்கள் படிவத்தை நிறைவு செய்து வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கின.

    இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.

    இச்சிறப்பு முகாமில் 17 வயது நிறைவடைந்தவா்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மைய தகுதி நாளில் (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1) தொடா்புடைய காலாண்டின் தகுதி நாளில் 18 வயது நிறைவடைந்து வாக்காளா் பட்டியலில் இடம் பெறாமல் உள்ள வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்க, படிவம் எண் 6-ஐ அருகிலுள்ள வாக்குச் சாவடியில் பெற்று நிறைவு செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கலாம்.

    மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயா் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ நிறைவு செய்தும், அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள, தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயா், உறவு முறை, புகைப்படம் மாற்றம் செய்ய படிவம் 8-ஐ நிறைவு செய்தும், இதுவரை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்காத வாக்காளா்கள் படிவம் 6 பி-ஐ நிறைவு செய்தும் இச்சிறப்பு முகாமில் வழங்கலாம் என்று தெரிவிககப்பட்டு உள்ளது.

    Next Story
    ×