ஆதிகைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

கைலாசநாதருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதிகைலாசநாதர்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதிகைலாசநாதர்.
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருள் மிகு ஆதி கைலாசநாதர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர் மற்றும் 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து நிறைவாக 108 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்தனர்.

சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்ப ட்டது பின்னர் அபிஷேகம் செய்த சாதம் கலவை சாதம் ஆக தயார் செய்து பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. ஏராளமா ன பக்தர்கள் கலந்து கொ ண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடு ஆதி கைலாசநாதர் சேவா சபா அறக்கட்டளை மேலா ண்மை அறங்காவலர் சிவ விவேகானந்தன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com