சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒன்பத்துவேலி வான்மீகிநாதருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வான்மீகநாதர்.
அன்னாபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வான்மீகநாதர்.
Published on

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து ஸ்ரீ ஆபத்சகேஸ்வரசாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சுவாமிக்கு அன்னா பிஷேகம் நடைபெற்றது.கோவிலின் மூலவரான ஆபத்சகேஸ்வரசாமிக்கு அன்னம் வடித்து அன்னத்தை(சோறு) கொண்டும் பக்தர்கள் வழங்கிய காய்கறிகளை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.

பூஜைகளு க்கு பிறகு தீபாரதனை காண்பி க்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல திருக்காட்டுபள்ளி ஸ்ரீ அக்னீஸ்வரசாமி திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ அக்னீஸ்வரசாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்துவேலி வான்மீகி நாத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

அன்னாபிஷேகம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com