என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கையில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பயிற்சி முகாம் நடந்தது.
    • 10 மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வட்டார கல்வி மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் தெற்கு மண்டலம் மற்றும் தென் மத்திய மண்டல இயக்க நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வரவேற்றார். பயிற்சி முகாமை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் சங்கர் தொடக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி நன்றி கூறினார்.

    இந்த முகாமில் 10 மாவட்டங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட வட்டார கல்வி மாவட்ட துணை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை கைது செய்தனர்.
    • சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.

    மானாமதுரை

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர். ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை டி.எஸ்.பி.கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய், கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.

    • போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. காரைக்குடி ரோடு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, நியூ காலனி, கீழகாட்டுரோடு, கீழத்தெரு, செட்டியார் குளம் வடகரை, சந்திவீரன் கூடம், கம்பலிங்கம் தெரு வழியாக அரசு மருத்துவ மனை ரோடு, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு பஸ் நிலையம் வழியாக பெரிய கடை வீதி வந்து சீரணி அரங்கத்தை சென்றடைந் தது.

    இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து மிடுக்காக வந்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 7 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சேவா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் ராமேசுவரம் மண்டல தலைவர் மங்க ளேஸ்வரன், கோட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலை வர் குகன், ஜில்லா பொறுப் பாளர் தினேஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பா ளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவுக்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.
    • பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கவுள்ள நிலையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது.

    மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.அதைத் தொடர்ந்து வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா ஆரம்பமாகிறது.

    இந்த திருவிழாக்களின் போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் பொழுது போக்கு அம்சங்களாக ராட்டினங்கள், திருவிழாக்கடைகள் அமைக்கப்படும். மானாமதுரை பகுதியை சேர்ந்த மக்கள் திருவிழாவை காண வைகை ஆற்றுக்குள் கூடுவார்கள்.

    திருவிழாவிற்காக வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் நகர் பகுதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருவிழாவின் போது பக்தர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறை மற்றும் குளியலறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    • திருஇருதய ஆலயத்தில் 144-ம் ஆண்டு பாஸ்கா விழா நடந்தது.
    • மரியின் ஊழியர் சபை கன்னியர்கள் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பிரசித்தி பெற்ற இடைக்காட்டூரில் திருஇருதய திருதலம் உள்ளது. இங்கு ஏசுவின் வாழ்க்கை வரலாற்று காட்சிகளாக 2 நாட்கள் பாஸ்கா திருவிழா நடந்தது.

    இதில் ஏராளமான கலைஞர்கள் 2 நாட்கள் விடியும் வரை நவீன தொழில் நுட்ப முறையில் டிஜிட்டல் ஒலி, ஒளி அமைப்பில் லேசர் திரைகளில் ஏசுவின் பிறப்பு, வரலாறு, ஏசு உயிர்ப்பித்தல் போன்ற நிகழ்ச்சிகளை தத்ரூபமான முறையில் நடித்து காண்பித்தனர்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை இமானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செல்ஸ் இளைஞர் பேரவை, மரியின் ஊழியர் சபை கன்னியர்கள் செய்திருந்தனர்.

    • திருப்புத்தூரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முஸ்லிம் ஜமாத்தார்கள் நடத்திய இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பங்கேற்று தலைமை வகித்தார்.

    முன்னதாக மாவட்ட அரசு டவுன் காஜி முகமது பாரூக் ஆலிம் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். திருப்பத்தூர் அனைத்து பள்ளி ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் முன்னிலை வகித்தனர்.

    மேலும் பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கமருன் ஜமான், ஆதில் மௌலானா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணை தலைவர் கான் முகமது, நகர இளைஞரணி அமைப்பாளர் பசீர் அகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் ரெமி சுலைமான் பாதுஷா, ஷமீம் நவாஸ், அபுதாஹிர் ஆகியோர் செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி கேயன், நாராயணன், நகர துணை செயலாளர் உதய சண்முகம், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிளாசா ராஜேஸ்வரி, சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, பழக்கடை அபுதாஹிர், ஷாஜகான், வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.எஸ்.ஆர்.சி.லெட்சுமணன் நன்றி கூறினார்.

    • மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கானத்தான்காடு, சண்முகநாதபுரம் பஞ்சாயத்தில் அரசு மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர், கோட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வட்டாட்சியர், காவல்துறை சார்பு ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

    கானாத்தான்காடு கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே டாஸ்மாக் மதுபானகடை அமைக்க ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சண்முகநாதபுரம் ஊராட்சியில் மதுபானகடையை அமைக்ககூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் மதுரை ஐகோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை மீறி நேற்று கடை திறக்கப்பட்டதால் கிராம மக்கள் கடை முன்பு திரண்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிந்தனர். காவல்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    நேற்று இரவு தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். மதுபானகடையை உடனே அகற்ற வேண்டும் இல்லை என்றால் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,

    தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • வைகை ஆற்றின் குறுக்கே ரூ.30.60 கோடியில் மதகு அணை கட்டப்படுகிறது.
    • விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கட்டிக் குளம், மிளகனூர் மற்றும் இதர கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக, வைகை ஆற்றின் குறுக்கே ரூ30.60 கோடி மதிப்பீட்டில் மதகு அணை கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த அணைக்கட்டு மூலம் ஏற்கனவே கட்டிக் குளம் முகப்பில் உள்ள தலைமதகு வழியாக கட்டிக் குளம் கண்மாய்க்கும், வைகை ஆற்றின் வலது புறத்தில் புதிதாக தலைமதகு கட்டி மிளகனூர், முத்தனேந்தல் மற்றும் இதர கண்மாய்களுக்கு வலது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் பகிர்ந்தளிக்க முடியும்.

    மேலும் இந்த அணைக்கட்டின் மூலம் வைகை ஆற்றின் மிக குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கவும், இதன் மூலம் உபரிநீரை தேக்கவும் இயலும். வைகை ஆற்றில் இருந்து உபரி வெள்ள நீரை மிளகனூர் கண்மாய் வழியாக சின்னக் கண்ண னூர், எஸ்.கரிசல்குளம் ஆகிய கண்மாய்களுக்கும், நாட்டார் கால்வாய் வழியாக ராஜகம்பீரம், அன்னவாசல் கண்மாய்கள் உள்பட 16 கண்மாய்களுக்கும் வெள்ள நீரை இந்த அணைக்கட்டு மூலம் வழங்க இயலும். இதனால் சுற்றியுள்ள 4269.00 ஏக்கர் பாசன நிலங்களும் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் தலைவர் லதா அண்ணாத்துரை, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (சிவகங்கை) பாரதிதாசன், உதவி செயற்பொறி யாளர்கள் மோகன்குமார், முத்துப்பாண்டி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயரமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
    • மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகள் பழமை யானது. இந்த பள்ளிக்கு தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவ தற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லை அளவீடு செய்யும்போது திருப்பத்தூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி பள்ளியின் எல்லைக்குள் வருவது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அதிகாரி தனுஷ்கோடி மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின்மாற்றியால் பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்மாற்றிக்கு தேவையான அளவில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டி ஆலோசனை வழங்கினார்கள்.

    அதனடிப்படையில் மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்த அளவின்படி டிரான்ஸ் பார்மரை சுற்றி பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர மாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    • கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல்- புனரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதி உதவி வழங்கப்பட்டது.
    • கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    சிவகங்கை,

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தி யும் வழங்க அரசு ஆணை யிட்டுள்ளது.

    அதில் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும் மற்றும் 20 வருடங்களுக்கு மேலி ருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், உரிய ஆவணங்களுடன் பெறப்படும் விண்ணப்ப ங்களை, இதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழவின் மூலம் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களில் உரிய ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரைக்கப் படும். அதன் பின்னர், நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.
    • வருடத்தின் முதல் நாளில் தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.



    பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. 

     திருப்பத்தூர்

    தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    குடவறை கோவிலான இங்கு மூலவர் விநாயகரை வருடத்தின் முதல் நாளில் தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    அதன்படி தமிழ் புத்தாண்டான இன்று காலை முதல் சிவகங்கை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கா லையில் கோவில் தெப்பத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ராமேசுவரம், ராமநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


    ×