search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை
    X

    தேனம்மாள்பட்டி கிராமத்தில் புதிய மின் மாற்றியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, செயற்பொறியாளர் செல்லத்துரை உள்பட பலர் உள்ளனர்.

    தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை

    • தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கட்டுக்குடிப் பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட செல்லியம்பட்டி, தேனம்மாள்பட்டி ஆகிய பகுதிகளிலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் புதிய மின்மாற்றி கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்மாற்றி களை இயக்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.

    அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றும் பொருட்டு, பொது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தை தங்கு தடையின்றியும், சீராக வும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்வ தற்கென 2021-22-ம் நிதியாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புக்கள், நடப்பாண்டில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் ஜான் கென்னடி, சோலை செல்வி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் ஜெயலெட்சுமி (பிரான்பட்டி), புகழேந்தி (கட்டுக்குடிப்பட்டி), சண்முகம் (செல்லியம்பட்டி), ஜெயலெட்சுமி (தேனம்மாள் பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×