என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வேன் கவிழ்ந்து விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
    • சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    சிவகங்கை

    புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப் பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது36). மினிவேன் டிரைவரான இவர் சம்பவத் தன்று சிவகங்கைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு புறப் பட்டார். சிவகங்கை அருகே கீழக்கவனவயல் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வேன் சாலையோ ரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மினி வேனில் பயணம் செய்த சுப்பிரமணி, ஜெயக்குமார், சோணமுத்து, சொர்ணராஜ், முத்துக்குமார், சுந்தர் ஆகி யோர் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். இளையான்குடி கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(35). இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஆடு குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த டேவிட் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை குட்டித் திண்ணி இந்திரா நகரை சேர்ந்த 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வாணியங்குடிக்கு சென்ற னர். அப்போது நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் படுகாய மடைந்தனர். சிவகங்கை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மனின் கோவில் 89 -ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்த யத்தில் நடுமாடு மற்றும் பூஞ்சிட்டு மாடுகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 12 மாட்டுவண்டிகளும், பூஞ்சிட்டு பிரிவில் 19 மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

    நடு மாடுகளுக்கு சிவகங்கை சாலை தண்ணீர் தொட்டி (வாட்டர் டேங்) அருகில் இருந்து தானிப்பட்டி வரையில் 7 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி களுக்கு க.பிள்ளையார்பட்டி விலக்கு வரை 5 மைல் தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டு போட்டி நடந்தது.

    சீறி பாய்ந்து சென்ற காளைகள் போட்டி போட்டுக் கொண்டு முந்தி சென்றன. அப்போது மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சாரதி என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் ரசிகர்களும், பொதுமக்களும் நின்று ஆரவாரத்துடன் போட்டி யை கண்டு ரசித்தனர்.

    நடுமாடு பிரிவில் இலங்கிப்பட்டி அர்ச்சுனன் முதலாவது பரிசும், தானிப்பட்டி ராமாயி 2-வது பரிசும், சிவகங்கை புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    பூஞ்சிட்டு பிரிவில் குண்டேந்தல்பட்டி சகாதேவன் முதல் பரிசும், கனகவள்ளி 2-வது பரிசும், பூண்டி கேசவன் 3-வது பரிசும் பெற்றனர். இதைத் தொடர்ந்து இன்று காலையில் பெரிய மாடு மற்றும் சிறிய மாடுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

    இதில் புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசும், மாங்குளம் தேவேந்திரன் 2-வது பரிசும், சூரக்குண்டு இளவரசு 3-வது பரிசும் பெற்றனர். சிறிய மாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொ ண்டன. இதில் அவனி யாபுரம் மோகன்சாமி முதல் பரிசும், புதுப்பட்டி மணி 2-வது பரிசும், புதுப்பட்டி இளையராஜா 3-வது பரிசும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமை யாளர்களுக்கும், மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்களுக்கும் ரொக்க பரிசு, கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    • சிவகங்கை மருத்துவ கல்லூரி புதிய முதல்வர் பதவியேற்றார்.
    • 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை தலைமை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வராக சத்தியபாமா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 32 ஆண்டுகள் மருத்துவ துறையில் பணியாற்றி வருகிறார். அவர் முதல் முறையாக சிவகங்கை தலைமை அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் இதற்கு முன்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி வந்துள்ளார்.

    • வீடு புகுந்து பணம்-காமிரா திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நித்யா(வயது42). இவர் வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், காமிராவை திருடிக்கொ ண்டு தப்பினார். மதகுபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரான்மலை பாப்பாபட்டியை சேர்ந்தவர் செல்வம். இவர் சம்பவத்தன்று அங்குள்ள மங்கைபாகர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.

    அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.

    இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    • கைப்பற்றிய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் உள்ள பாதரக்குடி ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். தற்போது மேலூரில் இருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 4 வழிச் சாலை அமைத்து வருகிறது. இந்த சாலையானது ஊரின் மையப்பகுதியில் செல்கிறது. இதனால் வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. புஞ்சை, நஞ்சை நிலங்கள் கையகப்படுத்தும் நேரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கலெக்டர்-ஆணைய அதிகாரிகள் நேரடியாக மக்களை சந்தித்து கைப்பற்றப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பு தருவதாக உத்தரவாதம் அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் விலை போகும் சென்ட் இடத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளனர். இதை கண்டித்து பாதரக்குடி ஊராட்சியில் இந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் இத்தகைய செயலுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாலைப் பணிக்காக நிலங்களை இழந்தவர்கள் கலெக்டரை சந்தித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும், தங்களது நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    • பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட தரியம்பட்டி கிராமத்தில் வழி விடு விநாயகர் வடக்கு வாசல் செல்வி அம்பாள் கருப்பர் ஆலய வருடா பிஷேக விழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. பாய்ந்து ஓடிய காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கிய காட்சிகளை பார்வை யாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் அம்பலக்காரர் ராஜா மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் செய்தி ருந்தனர். போட்டிக்கான விழாக்குழு பணிகளில் கமிட்டி நிர்வாகிகளான பரமசிவம், போஸ், சிங்காரம், மணிமாறன், பெரியசாமி ஆகியோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.
    • அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பசும்பொன்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதை சுற்றி உள்ள 60 பேர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு சுற்றுலா பஸ்சில் சென்றனர்.

    அங்கு சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு மானாமதுரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அபிராமத்தை அடுத்துள்ள முத்தாதிபுரம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. திடீரென்று பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

    டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பஸ்சில் இருந்த 20 பெண்கள், 13 ஆண்கள், 8 சிறுவர்-சிறுமிகள் என மொத்தம் 41 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கமுதி மற்றும் அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் விரைந்து வந்தன.

    அபிராமம் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பஸ் டிரைவர் செல்லம்(56) கால் முறிந்த நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், சந்தீப்வர்ஷன் (13) என்ற சிறுவன் தலையில் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்து வமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

    காயமடைந்த மீதமுள்ள 39 பேரில் சிலர் சிவகங்கை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற விண்ணப்பிக்கலாம்.
    • மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள், 2 கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மின்கலத்தினால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் (Battery Operated Wheel Chair) பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கைகள் மற்றும் 2 கால்களும் செயலிழந்த

    60 வயதிற்குட்டபட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதிற்குட்டபட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மேற்கண்ட குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனா ளிகள் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்,

    மேலும் கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்கண்ட சான்றுகளுடன் வருகிற

    16-ந் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சிவகங்கை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு 04575-242025 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விண்ணப்பித்தும் பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கல்லுவெட்டுமேடு பகுதியில் திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாள ருமான சண்முக வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சகா தேவன், ஒன்றிய அவைத் தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் கண்ணன், துணை செயலாளர்கள் முத்துராமன், சரசு சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் தங்கமணி, மணி, தவமணி, காட்டாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கவுன்சிலர் ரவி, ஆதிதிராவிடர் நல மாவட்ட துணை அமைப்பாளர் வக்கீல் ராமச்சந்திரன் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் இலக்கு வன் கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சுலைமான் பாதுஷா, மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினர். இதில் திருப்பத்தூர் நகர செய லாளர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் சாக்ளா, நகர அவைத் தலைவர் ராமரவி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிக்கந்தர் பாதுஷா, தொ.மு.ச. சண்முகநாதன், பேச்சாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய துணைச் செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர்.

    இளையான்குடி

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது தலைமையில் சாலைக் கிராமம் பஸ் நிலையத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆறு.செல்வராஜன், நகர செயலாளர் நைனா முகம்மது, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், நடராஜன், குணசேகரன், ஜெகநாதன், பாலகிருஷ்ணன், திலகர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் சாமிவேல் வரவேற்றார். மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், ஒன்றிய பொருளாளர் சித்திரைவேல் ஆகியோர் பேசினர். கணபதி நன்றி கூறினார். ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், தயாளன், சேவியர், செய்யதுகான், யாசர், இளைஞரணி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி,தனசேகரன், பிரபு,கவுன்சிலர்கள் முருகானந்தம்,செல்வி சாத்தையா, மலையரசி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    • 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பூஜைகள் நடந்தன. அங்குள்ள காசி குருபகவானுக்கு குருபெயர்ச்சி ஹோமம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து வழிபாடு செய்தனர். பெரிய நாச்சி அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வானவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள ராஜகணபதி, செந்தில் ஆண்டவர் காசிவிஸ்வநாதர், துர்க்கை காளி, காசிஅனுமான், பைரவர், சித்தர் முத்துவடுகநாதர், நவகிரகங்கள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ×