அரசு பள்ளி மாணவிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியை நகராட்சி தலைவர் பாராட்டினார். மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
அரசு பள்ளி மாணவிக்கு நகராட்சி தலைவர் பாராட்டு
Published on

 மானாமதுரை

பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 595 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் சாதனை படைத்தார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அப்போது துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com