என் மலர்
சிவகங்கை
- அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
- பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்
- சுத்தானந்த பாரதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
- இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மைய நூலகமும்-நூலக தன்னார்வலர் குழுவும் இணைந்து கவி யோகி சுத்தானந்த பாரதியின் 126-வது பிறந்தநாள் விழா மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது. பேராசிரியர் ஹேமமாலினி குத்துவிளக்கு ஏற்றினார். நூலக கண்காணிப்பு அலுவலர் சாமிநாதன் சுத்தானந்த பாரதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நூலகர்கள் முத்துக்குமார், சாந்தி, எழுத்தாளர் ஈஸ்வரன் ஆகியோரும் மரியாதை செய்தனர். நூலக தன்னார்வலர் ரமேஷ் கண்ணா வாசகர்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். இதில் நூலக பணியாளர்களும், வாசகர்களும் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் ரூ.10 கோடியில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட பொதுப்பணி த்துறையின் சார்பில் திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ10.03கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு அவர் கூறியதாவது:-
திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ3.71கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், காரைக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ1.98கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமான பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோன்று காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ரூ4.34 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சீர்மரபினர் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ரமணன், உதவி பொறி யாளர் சந்தோஷ் குமார், வட்டாட்சி யர்கள் வெங்க டேசன் (திருப்ப த்தூர்), தங்கமணி (காரை க்குடி) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- எடை அளவைகளுக்கான முத்திரையிடும் முகாம் தொடங்குகிறது.
- ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள வணிகர்கள் நலன் கருதி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் எடை அளவுகள் முகாம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள வணிகர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நகரில் உள்ள முத்து வடுகநாதர் சித்தர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முகாமில் தாங்கள் பயன்படுத்தி வரும் மின்னணு தராசுகள், மேடை தராசுகள், வில் தராசுகள், விட்ட தராசுகள், எடை கற்கள், நீட்டல் அளவைகளை ஆய்வாளர் முன்பு மறு பரிசீலனை செய்து அவற்றிற்கு முத்திரை வைத்து பயன்பெறலாம். மேலும் வணிகர்கள் முத்திரை வைக்க தவறும் பட்சத்தில் எடை அளவு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபதாரம் கட்ட நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தது.
- முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
காரைக்குடி
மத்திய அரசு இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செந்தூரி நாயகி சிவக்குமார் 95.3 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.
மாணவன் தனுஷ்ராஜ் 95 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாண வன் ராகுல் ராஜ்யவர்தன் 91.2 சதவீத மதிப்பெண்களு டம் பள்ளி அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவன் விஜயகுமார், மாணவி ஸ்ரீயா, சிவக்குமார் இரு வரும் 96 சதவீத மதிப்பெண்க ளுடன் 2-ம் இடத்தையும், மாணவன் கார்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்க ளுடன் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், ஆர்ட்டிபீஷியல் இண்டெலி ஜென்ஸ் பாடத்தில் 7 பேர் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், ட்ரஸ்டிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமார், முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
- தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்தது.
- காளையார்கோவில் தெற்கு ஒன்றியம் சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு நடந்தது.
காளையார் கோவில்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறவமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் யோக.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் வக்கீல் அ.சரவணன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் தோக்கப்பன், செல்லையா, திருநாவுக்கரசு, செல்வி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அய்யப்பன் வரவேற்றார். மறவமங்கலம் கிளைச் செயலாளர் முகமது சக்கரியா நன்றி கூறினார்.
காளையார்கோவில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கொல்லங்குடியில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.கென்னடி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் யோக.கிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் முத்தூர் கருப்பையா, செல்லபாண்டி, கண்ணப்பன், தென்னரசு கண்ணாத்தாள், கண்ணன், அழகப்பன், சந்திரன், நேரு, தமிழ்ச்செல்வன், அசோக், இளைஞரணி சக்திதாசன், தகவல் தொழில் நுட்ப அணி ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.
- சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. காரைக்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி தொடங்கி வைத்தார்.
இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.தேவர் சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பார்வைத்திறன் குறைபாடுள்ள செஸ் வீரர், வீராங்கனைகள், விவசாய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.
- பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியை நகராட்சி தலைவர் பாராட்டினார்.
- மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.
மானாமதுரை
பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 595 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் சாதனை படைத்தார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அப்போது துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.
- சென்னையில் 15-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
- தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
சிவகங்கை
சிவகங்கையில் தமிழ்நாடு ஊாட்சி செயலாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டலின் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யும் விதமாக பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இது பணியாளர்கள் மத்தி யில் மிகுந்த வர வேற்பையும் பாராட்டையும் பெற்று வரு கிறது.
காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்போது படித்த ஏழை மாணவர்கள் அரசு பணிக்கு வரும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது தவிர ஜாதி அடிப்படை யிலான இட ஒதுக்கீடுகள் மூலம் சமூகநீதி நிலை நாட்டப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தான் ஊரக வளர்ச்சி துறையில் மகத்தான 2 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த சட்ட திருத்தத்தின் மூலமும், ஒரு விதி திருத்தத்தின் மூலமும் ஊராட்சி செயலர் பணியி டங்கள் இனி வருங்காலங் களில் அரசு அலுவலரால் கட்டுப்படுத்தப்படும்.அதற்குரிய பணி விதிகள் அரசாணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே முதல்- அமைச்சரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும் அந்த பணி விதிகள் அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டி எங்கள் அமைப்பின் சார்பில் வருகிற 15-ந்தேதி முதல் சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது மேலும் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி களாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நிர்வாக அதிகாரத்தையும் கொடுத்து, அவருக்கு கீழ் ஒரு அரசு அலுவலரை நியமிக்கும் அல்லது தண்டிக்கும் அதிகாரத் தையும் கொடுத்தால் எவ்வ ளவு பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் நிதி கையாளக்கூடிய கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் வலுவான தாக அரசு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக இருந்தால் மட்டுமே நிதி கையாளுகை சிறப்பாக இருக்கும். காலமுறை ஊதியம் பெறும் பணியா ளர்களின் பணி நியமனம் அரசு பணியாளர் தேர்வாணைய சட்ட விதி திருத்தலின்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படும் போது இளைஞர்களும், படித்து வேலையற்ற பட்ட தாரிகளும் பொதுப்போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்ய வழிவகுக்கும். இதனை உணர்ந்து தமிழ்நாடு அரசு விரைந்து தகுந்த உத்தரவு களை வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டி ஊராட்சிக் குட்பட்ட கோவில்பட்டி விளக்கு பகுதியில் நேற்று இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதில் சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் பஸ்களில் சென்ற பயணிகள் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்றத்தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திர உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் துரிதமாக செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை சமூக ஆர்வ லர்களும் வாகன ஓட்டிகளும் வெகுவாக பாராட்டினர்.
மேலும் சாலையோ ரத்தில் காய்ந்து பட்டுப்போன நிலையில் இருந்து வரும் மரங்களை அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் துறை சார்ந்த அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
- நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றி யத்தில் நீர்ப் பாசன மேலாண்மை நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தெற்கு கீரனூர் கிராமத்தில் கால்நடை மருத் துவ முகாமை தொடங்கி வைத்த அவர் இதன்மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்து ரையாடினார்.
பின்னர் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டா ரங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.
முனைவென்றி கிரா மத்தில் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத் தும் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து கேட்டறிந்தார்.
மேலநெட்டூர் கிராமத் தில் ரூ.29.45 லட்சத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடர்பாக விவசாயி களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கலந் துரையாடினார்.
கச்சாத்தநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளைகள், வைகை ஆற் றில் உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாய் சீர மைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல்,கீழ் நாட்டார் கால்வாய் ஆகிய வற்றைத் தூர்வாரி சீரமைக் கும் பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணர் வித்தியாசாகர், வேளாண்மைத் துறை நிபு ணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர்
ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கருகுடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஸ்ரீ வெள்ளச்சி ஸ்ரீ மலையரசி ஸ்ரீ சோனை கருப்பர் ஸ்ரீ ஓட்டத்திடல் காளியம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப் ஏற்பாட்டில் முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா பெரும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர்.






