என் மலர்
சிவகங்கை
நெல்லை மாவட்டம் பழையபேட்டை சுந்தர விநாயகர் கோவில் தெருவைச்சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர், கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரெயில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரெயில் நிலையத்துக்கு இரவில் வந்தது. பிளாட்பாரத்தையொட்டி ரெயில் வந்த போது, படிக்கட்டில் அமர்ந்து வந்த முருகன், காலை எடுக்கவில்லை. இதனால் பிளாட்பாரத்தில் கால் தட்டியதில், முருகன் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.
பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மானாமதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் கார்த்திக் (வயது 31). இவர் திருப்பத்தூர் அருகே மதகுபட்டியில் ஒரு மர அறுவை மில்லில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவு மதகுபட்டிக்கு வேலைக்கு வந்து கொண்டிருந்தார். திருப்பத்தூர்-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில், அரளிக்கோட்டையைத் தாண்டி சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத் தடுமாறி ரோட்டின் பக்கவாட்டில் இருந்த பாலத்தின் கைபிடி சுவர் மீது மோதியது.
அதில் கார்த்திக் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து திருக்கோஷ்டியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஒரு கால பூஜை நடைபெறும். அர்ச்சகர் சீனிவாசன் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது மூலஸ்தானத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கரியமாணிக்க பெருமாள் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
சாமி சிலைகள் கொள்ளை போனது குறித்து மானாமதுரை குற்றப்பிரிவு போலீசில் அர்ச்சகர் சீனிவாசன் புகார் செய்தார். போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு ரூ. 2½ லட்சம் இருக்கும் என தெரிகிறது.
கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை போன சிலைகளை மீட்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:
சிவகங்கை டி.புதூரை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 6 ஆயிரம் கண்மாய்கள், 3 ஆயிரம் குளங்கள் உள்ளன. இவற்றின் நீராதாரமாக சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, தேனாறு, உப்பாறு, நாட்டாறு, விருசுகனியாறு, பாம்பாறு உள்ளிட்ட 10 சிற்றாறுகள் உள்ளன.
இந்த நீர்நிலைகள், சிற்றாறுகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சீமைக் கருவேல மரங்களும் அதிகளவில் உள்ளன.
அதிகளவில் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. மழை பெய்யும் நேரத்தில் சிற்றாறுகளின் நீர், கண்மாய் மற்றும் குளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கிடைக்கும் மழை நீரையும் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனு அளித்தாலும் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, சட்டவிரோத மணல் திருட்டை தடுக்கவும், நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், நீர்நிலைகளையும், சிற்றாறுகளை பழைய இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி ஆகியோர், உயர் நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டின் எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள், அவற்றில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விபரம், ஆக்கிரமிப்பு அகற்றப்படாதவை எவ்வளவு, நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்காக கடந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை செயலர், நகராட்சி நிர்வாக செயலர் ஆகியோர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 23க்கு ஒத்தி வைத்தனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனையில் பலவித பிரச்சினைகள் இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் பின்னடைவு ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. நாகராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது அரசு மருத்துவமனையில் டாக்டர் குறைவு, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை, மயக்க மருந்து செலுத்தும் டாக்டர் ஆகியோர் இல்லாமல் இருப்பது போன்ற பல வித பிரச்சினைகளால் சிகிச்சைக்கு வருபவர்கள் அவதியடைந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறுகையில், அரசு மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து புகார் வந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். அதில் அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர், நர்சுகள், ஊழியர்கள் ஆகியோரிடமும் மருத்துவமனையின் நிலை குறித்து கேட்டேன்.
முதல்-அமைச்சர் மானாமதுரை தொகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஒரு ஆய்வு அறிக்கையை கொண்டுவர என்னிடம் கூறியுள்ளார். அதன்படி நான் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து முதல்-அமைச்சரை சந்திக்க செல்கின்றேன் என்றார்.
ஆய்வின் போது முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் யூனியன் சேர்மன் மாரிமுத்து மற்றும் கட்சியினர் உடன் சென்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தானைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (வயது 30). இவரது மனைவி கஸ்தூரி (25). இருவருக்கும் திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
நேற்று மாலை மீண்டும் தகராறு எழுந்ததாக தெரிகிறது. இதில் கோபித்துக் கொண்ட கார்த்திக் ராஜா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
அப்போது வீட்டுக்கு வந்த கார்த்திக் ராஜாவின் தந்தை, மருமகள் தூங்குவதாக நினைத்து அழைத்தார். அதற்கு பதில் இல்லை. அப்போது வீட்டுக்குள் கஸ்தூரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கஸ்தூரியின் தந்தை செட்டிநாடு போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் கஸ்தூரியின் இறப்பு குறித்து தேவகோட்டை ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.
இளையான்குடி தாலுகா அண்டக்குடி கிராம புதூர் வலசையை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவருடைய நண்பர்கள் அண்ணாத்துரை (30) மற்றும் சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (32). இவர்கள் அனைவரும் ஒரு காரில் வேலை விஷயமாக பரமக்குடிக்கு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மானாமதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். பிராமணக்குறிச்சி கிராமம் அருகே வந்த போது, மானாமதுரையில் இருந்து ஒரு அரசு பஸ் பரமக்குடிக்கு சென்றது. அந்த பகுதியில் இருந்த ஒரு வளைவில் பஸ் வந்த போது, எதிர்பாராத நிலையில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதன் இடிபாடுகளில் உள்ளிருந்த 3 பேரும் சிக்கிக் கொண்டனர். விபத்தில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த அண்ணாத்துரை, ஜெயப்பிரகாஷ் ஆகியோரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்தில் அரசு பஸ்சின் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது.
முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதற்கு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 14,638 பொருட்களும் அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும், பள்ளிக் குழந்தைகளை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்படும்" என கூறினார்.
காரைக்குடி:
இரட்டைத் தலைமை காரணமாகத்தான் பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டது.
எனவே பொது மக்களிடம் ஈர்ப்பு சக்தி உள்ள ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா பேட்டிளித்தார். இது அ.தி.மு.க. வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமனம் செய்ய கழக தொண்டர்கள் விரும்புகிறோம். இப்படிக்கு, புரட்சித்தலைவரின் விசுவாசிகள், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடமும் ரூ.2 கோடி கேட்கப்பட்டு உள்ளது.
ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜூன் முதல் வாரம் அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி அகழாய்வு பணிகள் நடப்பதற்காக அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இன்று அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதற்கு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப்பணி நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக தொல்லியில் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் நாளை ஆய்வு செய்ய உள்ளார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல்.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவி தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 347 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.
மாவட்ட கலெக்டருக்கு சமூக வலைதளம், வாட்ஸ்- அப், குறுஞ்செய்தி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு எவ்வளவு தான் பலமாக இருந்தாலும் கட்சி பலவீனம் அடைந்தால் தோற்றுவிடும். இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
மத்தியில் பாரதிய ஜனதா 2-வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது என பொறாமைப்படலாம். ஆனால் அந்த கட்சியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர்கள் மத்தியில் நாள்தோறும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது உகந்த விவாதமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவாதங்கள் நடை பெறுகின்றன.
விவாதங்கள் தான் கட்சியை பலப்படுத்தும். காந்தி, நேரு காலத்தில் சிறையில் நடந்த விவாதங்கள் தான் பெரிய போராட்டங்களுக்கு வித்திட்டன.
போராட்டம் நடத்தி அனைவரும் சிறை சென்று 10 அல்லது 20 நாட்கள் சிறையில் இருந்தோம் என்றால் கருத்து வேறுபாடுகள் மறைந்து கட்சி வலிமையடையும்.
அந்த வகையில் நீங்கள் சிறைச்சாலை சென்றால் நானும் சிறைக்கு வர தயாராக உள்ளேன்.
தமிழர்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க விட மாட்டோம். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்த வெற்றி கூட்டணியை அமைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், மற்ற தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடவில்லை. காங்கிரஸ் கட்சி போர்க்களத்தில் தான் தோற்றுள்ளது. போரில் தோற்கவில்லை.
1971-ம் ஆண்டு இந்திரா காந்தி, கருணாநிதி அமைத்தது இந்த கூட்டணி. இந்த கூட்டணி 6 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி கூட்டணியாக தொடர்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.






