search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன்
    X
    சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன்

    சிவகங்கையில் குறைதீர் கூட்டம்: கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு - கலெக்டர் உத்தரவு

    சிவகங்கையில் கோரிக்கை மனுவிற்கும் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

    குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல்.

    சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவி தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பாக மனுக்கள் மற்றும் இதர மனுக்கள் போன்ற 347 கோரிக்கை மனுக்கள் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்டது.

    மாவட்ட கலெக்டருக்கு சமூக வலைதளம், வாட்ஸ்- அப், குறுஞ்செய்தி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும் ஒவ்வொரு மனுவிற்கும் ஒரு மாத காலத்திற்குள் உரிய தீர்வு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×