என் மலர்

  செய்திகள்

  செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்ய வேண்டும்- காரைக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள்
  X

  செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்ய வேண்டும்- காரைக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

  காரைக்குடி:

  இரட்டைத் தலைமை காரணமாகத்தான் பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டது.

  எனவே பொது மக்களிடம் ஈர்ப்பு சக்தி உள்ள ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா பேட்டிளித்தார். இது அ.தி.மு.க. வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

  ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

  இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நியமனம் செய்ய கழக தொண்டர்கள் விரும்புகிறோம். இப்படிக்கு, புரட்சித்தலைவரின் விசுவாசிகள், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Next Story
  ×