என் மலர்
சேலம்
- தும்பல் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்குட்டி மடுவு வனப்பகுதியில் வனவர் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது குதி மடுவு அருகே பிளாஸ்டிக் பேரல்களில் ஊறல் போட்டு வைத்திருந்த ஒருவர், சாராயம் காய்ச்சி விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் தும்பல் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்னக்குட்டி மடுவு வனப்பகுதியில் வனவர் அறிவழகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது குதி மடுவு அருகே பிளாஸ்டிக் பேரல்களில் ஊறல் போட்டு வைத்திருந்த ஒருவர், சாராயம் காய்ச்சி விற்பனைக்கு எடுத்துச் செல்வது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் சின்ன குட்டி மாடு கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் (37) என்பதும், பிளாஸ்டிக் கேனில் அடைத்து 15 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது. வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய செல்லப்பனை, தும்பல் வனத்துறையினர், 15 லிட்டர் சாராயத்துடன் வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். வாழப்பாடி போலீசார் செல்லப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கோட்டையன் (75), சம்பவத்தன்று இரவு இவர் எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வெள்ளரி வெள்ளி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
- அவ்வழியாக சென்ற வர்கள் செங்கோட்டையனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எடப்பாடி:
எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி பகு தியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன் (75), சம்பவத்தன்று இரவு இவர் எடப்பாடி- நெடுங்குளம் பிரதான சாலையில் உள்ள வெள்ளரி வெள்ளி ஏரிக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவ்வழியாக சென்ற வர்கள் செங்கோட்டையனை மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தான் குடும்ப கஷ்டத்தில் மனமுடைந்து விவசாய பயன்பாட்டிற்கான பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்து விட்டதாக தெரி வித்தார்.
இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக செங்கோட்டையன் சேலத் தில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செங்கோட்டையன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதுகுறித்து பூலாம் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த திரு நங்கைகள் அவரிடம் நைசாக பேசி அவரை அழைத்து சென்றனர்.
- பின்னர் அவர் வைத்திருந்த ரூ.4,800 பணம் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
சேலம்:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அத்திப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அமிர்த லிங்கசிவா(42). இவர் நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கிருந்த திருநங்கைகள் அவரிடம் நைசாக பேசி அவரை அழைத்து சென்றனர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.4,800 பணம் செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இதுகுறித்து அமிர்தலிங்கசிவா, பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அதில், அமிர்தலிங்கசிவாவிடம் பணம், செல்போனை பறித்தது. திருநங்கைகளான செம்பா (23), கனிஷ்கா (24),லீலா (21), அக்ஷரா (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
- இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி பெட்சீட், ஜமக்காளம், சட்டை துணிகள் உள்பட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு விசைத்தறி யில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக சட்டப்படி தண்டணைக்குரிய செயல், மீறி உற்பத்தி செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் விசைத்தறியாளர் மீது போலீசில் புகார் கொடுக்கப்படும். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாத சிறை அல்ல து 5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டணை வழங்கப்படும்.
இது தொடர்பான விவரம் பெற கலெக்டர் அலுலக அறை எண் 408-ல் இயங்கி வரும் உதவி அமலாக்க பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.,
- மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
- அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் மீன் வளத்தைப் பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுக்கு 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு வளர்க்கப்படும் மீன்கள் உரிமம் பெற்ற மீன வர்கள் மூலம் பிடிக்கப்பட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .
இதற்காக அரசு மீன் விதைப் பண்ணையில் செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்பட்டு மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
6 லட்சம் மீன் குஞ்சுகள்
நடப்பாண்டில் முதல்கட்ட மாக அணை யின் நீர்த்தேக்க பகுதியான மாசிலாப் பாளையம் காவிரியாற்றில் மீன்வளத்துறை சார்பில் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இதில் ரோகு 4.5 லட்சமும், மிர்கால் 1.5 லட்சம் மீன் குஞ்சுகளும் விடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆர்.டி.ஓ. தணிகாசலம், சதாசிவம்
எம்.எல்.ஏ. (பா.ம.க.) மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது.
- கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநக ராட்சிக்கு குடிநீர் வினியோ கம் செய்யும் நீரேற்று நிலை யம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.
வாலிபர் பிணம்
இந்த நிலையில் இந்த நீரேற்று நிலையத்தின் அடிப்பகுதியில் தலையில் காயத்துடன் வாலிபரின் பிணம் ஒன்று கிடப்பதாக கருமலைக்கூடல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர்.
சாவில் சந்தேகம்
இதில் இறந்த வாலிபர் மேட்டூரை அடுத்த மாசி லாபாளையத்தை சேர்ந்த நடராஜ் (28) என்பதும், இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே நடராஜின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்ப தாக தெரிவித்து உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் போலீ சார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
- இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்.
சேலம்:
சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக அனுராதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் மனு கொடுக்க சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் நேரம் கேட்டிருந்தார்.
அதன்படி இன்று காலை அருள் எம்.எல்.ஏ. சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அனுராதா ஆய்வுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை புறக்கணித்ததாக கூறி அருள் எம்.எல்.ஏ. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிர்வாகிகளுடன் திடீரென தர்ணா போராட்டம் செய்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரிடம் சமரச பேச்சுவாரத்தை நடத்தினர்.
சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். திட்டப்பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டால் எந்த பதிலும் முறையாக தருவதில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். எனக்கு கவுன்சில் கூட்டத்துக்கு தகவல் அனுப்புவது இல்லை. ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் எங்கள் குறைகளை நேரம் ஒதுக்கி கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர்.
- மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் காடையாம்பட்டி பகுதியில் உள்ளது. இதில் கோவிந்தனின் சகோதரி மல்லிகா பாகமான 10 ஏக்கர் நிலத்தை கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், மாணிக்கம், மகள் மணிமேகலை ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக தங்கள் பெயரில் மாற்றி கொண்டனர்.
மேலும் கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் ஓமலூர் வட்டம் நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா 5 பேர் மீதும் போலி முத்திரை தயாரித்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நிலை குறித்து அக்கறையில்லாத முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
- விஷம் போல் உயர்ந்து வரும் விலைவாசியினை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடி ஏற்றினார்.
கோரணம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் அறிவித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா மினி கிளினிக், இளம்பெண்களின் திருமணத்திற்கான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அ.தி.மு.க.வின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் திட்டமிட்டு முடக்கியதால் ஏழை, எளிய மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மேட்டூர் அணை உபரிநீர் மூலம், வறண்ட 100 ஏரிகளை நிரப்பும் பாசன திட்டம் 6 ஏரிகளை மட்டுமே நிரப்பிய நிலையில் கைவிடப்பட்டதால் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நிலை குறித்து அக்கறையில்லாத முதல்வராக செயல்பட்டு வருகிறார். தற்போது டெல்டா பாசன பகுதியில் பெரும் அளவிலான பரப்பில் குறுவை சாகுபடி பணிகள் நடந்து வரும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அணையில் இன்னும் குறுகிய காலத்திற்கான நீர் இருப்பு உள்ள நிலையில், காவேரி பாசன பகுதி விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் அண்மையில் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள கர்நாடக முதல்வர் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பேசி, உரிய நேரத்தில் காவிரி நீரை பெற்றுத் தர தவறிய நிலையில், அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து வந்த தமிழக முதல்வர், தமிழகம் திரும்பி நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு காவிரி நதி நீர் குறித்து கடிதம் எழுதி இருப்பது, அவர் காவிரி நதிநீர் பிரச்சினையில் கபட நாடகமாடுவதை வெளிச்சமாக்கி உள்ளது.
ஆனால் கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜ.க.வுடன் கூட்டணியிலிருந்த போதும், காவிரி நதிநீர் பிரச்சனைக்காக 22 நாட்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியதை யாரும் மறக்க முடியாது.
இதேபோல் கடந்த 2 ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் உணவு பொருட்களின் விலை 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. குறிப்பாக உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் வெளிமாநிலங்களில் இருந்து தேவையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கூட்டுறவுத் துறையின் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் விநியோகம் செய்யப்பட்டதால் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. தற்போது விஷம் போல் உயர்ந்து வரும் விலைவாசியினை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை தி.மு.க. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த முன்னாள் நிதி அமைச்சரின் ஆடியோ உரையாடலே அம்பலப்படுத்தி உள்ள நிலையில், ஊழல் செய்து சேர்த்த பணத்தை காப்பாற்றுவதிலேயே தி.மு.க. அமைச்சர்கள் முழு கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போதைய தி.மு.க. கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத நிலையில், குடும்ப அரசியல் நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வினரை பார்த்து அடிமைப்பட்டு கிடப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
ஆனால் நானோ, அ.தி.மு.க.வோ எவருக்கும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை.
மாறாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பதற்காக பல இடங்களில் அடிமைப்பட்டு கிடக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வெள்ளாளபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க.வையும் என்னையும் கலங்கப்படுத்திடும் நோக்கில், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தினை சுட்டிக்காட்டி பேசி வருகிறார். அது குறித்து அவரிடம் நான் சட்டமன்றத்திலேயே விவாதத்திற்கு அழைத்தேன், கொடநாட்டில் நடைபெற்ற நிகழ்வு, மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று, அதில் ஈடுபட்டவர்கள் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த கொடும் குற்றவாளிகள்.
அவ்வழக்கில் அப்போதைய அ.தி.மு.க. அரசு உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபர்களுக்கு ஜாமீன் வழங்கியதும், அவர்களுக்காக வாதாடியதும் தி.மு.க.வினர் என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதேபோல் என் மீது கலங்கம் சுமத்தும் வகையில், தி.மு.க.வினரால் தொடரப்பட்ட ஊழல் வழக்கிற்கும் நீதிமன்றம் சரியான தீர்ப்பினை வழங்கியுள்ளது. இனி இதுபோன்ற பிரச்சனைகளை கையில் எடுத்து தி.மு.க.வினர் எங்களை பயமுறுத்த முடியாது
இவ்வாறு அவர் பேசினார்.
- நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
- கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
நேற்று வினாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.96 அடியாகவும் நீர்இருப்பு 32.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது அதன் நீர்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் வெளியே தெரியும்.
அதன்படி கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.
இந்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
- தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
- தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
தக்காளி விலை உயர்வின் காரணமாக, அவற்றை மர்ம நபர்கள் திருடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சுழற்சி முறையில் காவல் காத்து வருகின்றனர்.
மேலும் தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்
- சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை
சங்ககிரி:
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3-ந் தேதி அனுசரிக்கப்படுவதை யொட்டி சங்ககிரி ஆர்.டி.ஓ., தலைமையில் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி தலைமை தாங்கி பேசியதாவது; கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை. விழாவிற்கு வருவோர் கைகளில் கொடி,
பேனர்கள் மற்றும் உருவப்படங் களை எடுத்து வர அனுமதி இல்லை. எந்த ஒரு அமைப்பினரும் தியாகி தீரன் சின்னமலை நினைவு இடத்தில் பொருட்களை எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை.
எந்த அமைப்பினருக்கும் சங்க
கிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை. அவரவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குறிப்பட்ட நேரத்தில் கலைந்து சென்றுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் காவல்துறையினர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக வந்து குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது.
சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஒரு அமைப்பும் டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் சுவர் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் சங்ககிரி டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி, தாசில்தார் அறிவுடைநம்பி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






