டாஸ்மாக் கடையில் மது கேட்டு தகராறு செய்த வாலிபர் மண்டை உடைப்பு

சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார். ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.
டாஸ்மாக் கடையில் மது கேட்டு தகராறு செய்த வாலிபர் மண்டை உடைப்பு
Published on

சேலம்:

சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் அரிதாஸ் (40). இவர் தினமும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் மது குடித்து வந்தார்.

தகராறு

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஓசியில் மது கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அரிதாஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த டாஸ்மாக் ஊழியர் ராஜூ மது பாட்டிலை எடுத்து ஹரிதாஸ் மண்டையில் அடித்தார். இதில் அரிதாஸ் மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்த கொட்டியது.

வழக்கு

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com