என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள்.
சேலம் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
- சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
நீதிமன்றங்களில் காந்தி, திருவள்ளுவர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு சேலம் மாவட்ட வக்கீல்கள் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்பாளர்கள் வக்கீல்கள் சசிகுமார், இளைய ராஜா, சந்தியூர் பார்த்திபன், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வக்கீல்கள் பிரதாபன், பொன்.ரமணி, மாசிலாமணி, திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி னார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் கனகராஜ், வீரமணி, செல்வராஜ், ரவி, சின்னதுரை, சதீஸ்குமார், திருமுருகன், நேதாஜி, செந்தில்குமார், கதிரவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






