என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சேலம்:

    குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம்

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார்.
    • கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணி புரிந்து வருபவர் சக்திவேல் (49) இவர் இன்று காலை கன்னங்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு வைத்து விஷம் குடித்தார். இதை பார்த்த பேரூராட்சி ஊழியர்கள் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற கன்னங்குறிச்சி போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது. மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன்.

    இந்த நிலையில் இன்று வேலைக்கு தாமதமாக வந்ததால் பேரூராட்சி ஊழி யர்கள் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரி டம் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதிஅம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
    • கோவில்களிலும் மஹா பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதிஅம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. மஹா பவுர்ணமி தினத்தையொட்டி உலக நன்மைக்காக நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. பட்டாடை உடுத்தி சந்தனம் பூசி மலர்மாலை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தருமராஜர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணபகவான் உள்ளிட்ட மரசிற்ப சுவாமிகளுக்கும், வன்னிமரத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோவில்களிலும் மஹா பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    • குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால்,
    • அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புற வழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் இல்லாததால், அதிக உயிரி ழப்புகள் ஏற்பட்டன. பொது மக்கள் போராட்டத்தை யடுத்து அங்கு மேம்பாலம் கட்டப்பட்டது.

    அதே போல் அதிக மக்கள்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் பகுதி உள்ளது.

    தட்டான்குட்டை, வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான், கடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் உள்ள நிலையில் மாணவ, மாணவியர் இந்த சாலையை கடந்து செல்லும் அத்தியாவசியம் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் குமாரபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக அதிக வாக னங்கள் சென்று வருகிறது. பொதுமக்கள் இந்த சாலையை கடக்க வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குமாரபாளை யம் போலீஸ் நிலையம், போக்கு வரத்து போலீஸ் நிலையங்க ளில் போதிய போலீசார் நியமித்து, பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், இந்த இடத்தின் அத்தியாவசியம் கருதி உடனே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சேலம்-கோவை புற வழிச்சாலை, கத்தேரி பிரி வில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளில் ஊழி யர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    2023 ஜூலை இறுதி வாரத்தில் பூமி பூஜை போடப்பட்டு, மேம்பால பணிகள் தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் அளவீடு பணிகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. மேம்பாலம் வருமா, வராதா? என எதிர்பார்ப்பு டன் காத்திருக்கிறோம் . இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்னசோரகை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் பழனி (30) கோவையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வருகிறார்.

    3 மாத கர்ப்பிணி

    இவருக்கும், எடப்பாடி மேட்டு தெருவை சேர்ந்த பிரபாகரன் - சரஸ்வதி தம்பதியின் மகள் சந்தியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் சந்தியா 3 மாத கர்ப்பமாக இருந்தார்.

    இந்நிலையில் சந்தியா விற்கும் அவரது மாமியா ருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. சம்ப வத்தன்றும் சந்தியா திடீரென வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்த நங்கவள்ளி போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்தியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மேட்டூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

    பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ தணிகாச்சலம், ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா, மேட்டூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், ஜலகண்டா புரம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆகியோர் சந்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும், கணவர் பழனியிடம் இருந்து சந்தியாவின் பெண் குழந்தைக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதாகவும் தெரிவித்தனர்.

    • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.
    • கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அருகே உள்ள சின்ன கொல்லப்பட்டி வி.கே.வி.நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (70).

    இவர் ஏலச்சீட்டு மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையடுத்து மீனாட்சி சுந்தரம் மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் மீனாட்சி சுந்தரம் மாதந்தோறும் பவுர்ணமியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவக்கரை அம்மன் கோவிலுக்கு மனைவியுடன் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று பவுர்ணமியையொட்டி மாலை தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இன்று காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி சுந்தரம் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    அப்போது வீட்டின் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனிடையே இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர். இதுகுறித்து உடனடியாக மீனாட்சி சுந்தரம் கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    • லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
    • மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1997 முதல் தனியார் மூலம் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் 34 சுங்கசாவடிகளில் கட்டணம் அமல்படுத்தப்பட்ட நிலையில் 2004-2008 கால கட்டத்தில் சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 63 சுங்கசாவடிகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டிற்கு 2 பிரிவுகளாக ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய நாட்களில் கட்டண உயர்வை அமுல்படுத்தி கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி இன்று நள்ளிரவு முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, ஓமலூர், வைகுந்தம், கரூர் மாவட்டத்தில் வேலன் செட்டியூர், மணவாசி, தர்மபுரியில் பாளையம், ஈரோட்டில் விஜயமங்கலம் மற்றும் விக்கிரவாண்டி, கொடைரோடு, பொன்னம்பலப்பட்டி, சமயபுரம், திருப்பராய்த்துறை, மொரட்டாண்டி, புதூர் பாண்டியபுரம், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திருமாந்துறை, வாழவந்தான் கோட்டை, எலியார்பத்தி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    அதன்படி ஓமலூர் சுங்க சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை சென்று வர பழைய கட்டணம் 90-ல் இருந்து 95 ரூபாய், பல முறை சென்று வர 130-ல் இருந்து 145 ரூபாய், மாத கட்டணம் 2 ஆயிரத்து 600-ல் இருந்து 2 ஆயிரத்து 870 ரூபாய், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 155-ல் இருந்து 165 ஆகவும், பல முறை சென்று வர 230-ல் இருந்து 250 ஆகவும், மாத கட்டணம் 4 ஆயிரத்து 520-ல் இருந்து 5020 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

    கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 300-ல் இருந்து 335, பல முறை சென்று வர 480-ல் இருந்து 500, மாத கட்டணம் 9640-ல் இருந்து 10,040 ரூபாய், 2 அச்சு மிக கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 480-ல் இருந்து 540, பல முறை சென்று வர 750-ல் இருந்து 805 மாத கட்டணம் 15ஆயிரத்து 100ல் இருந்து 16 ஆயிரத்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலை வாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    இந்த சுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள், அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுங்க கட்டண உயர்வால் லாரி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாடகை உயரும் அபாயம் உள்ளது. வாடகை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சுங்க கட்ட ண உயர்வை குறைக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது-

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சம் லாரிகள் இயங்கின. தொடர்ந்து டீசல் விலை ஏற்றம், காப்பீட்டு கட்டண உயர்வு, லோடு கிடைக்காமை, ஆன்லைன் அபராதம், போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் 1.5 லட்சம் லாரிகள் தற்போது இயங்கவில்லை.

    4.5 லட்சம் லாரிகள் மட்டும் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. மற்ற லாரிகள் தமிழகத்திற்குள் இயக்கப்படுகிறது. லாரி தொழில் லோடு கிடைக்காததால் நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சவாடிகள் உள்பட நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல அதிக பட்சமாக ஒரு லாரிக்கு 1500 ரூபாயும், சேலம் சென்னைக்கு 300 ரூபாயும், கன்னியாகுமரி-சென்னைக்கு 500 ரூபாய் வரையும் சுங்க கட்டணம் உயருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

    ஏற்கனவே லாரி வாடகை உயர்வால் லோடு கிடைக்காத நிலையில் மேலும் வாடகையை உயர்த்தினால் லாரி தொழில் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் லாரி வாடகையை உயர்த்தும் எண்ணம் இல்லை. எனவே மத்திய அரசு காலாவதியான சுங்கசாவடிகளை நீக்க வேண்டும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வாகனங்களிலும் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்கள் சாலைகளை பராமரிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள் படி கழிப்பறை, ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்பட எந்த வசதிகளையும் செய்வதில்லை. தமிழகத்ததில் உள்ள 63 சுங்க சாவடிகளில் 1997-ல் ஏற்படுத்தப்பட்ட 14 சுங்க சாவடிகள் அதன் திட்ட மதிப்பீட்டை தாண்டி மக்கள், வாகன உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி விட்டன.

    இது குறித்து மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் பார்வைக்கு இந்திய மோட்டார் காங்கிரஸ் கொண்டு சென்ற நிலையில் தன்னிறைவு சுங்க சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த போதும் வசூல் வேட்டை தொடர்கிறது. இந்த நிலையில் சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை அமல் படுத்துவது மோட்டார் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தன்னிறைவு எட்டிய சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், கட்டண அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது போல டீசல், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், மாநில அரசு டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அப்போது தான் நலிவடைந்துள்ள லாரி தொழிலை கொஞ்சமாவது பாதுகாக்க முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே லாரிகளுக்கு போதுமான லோடு கிடைக்காத நிலையில் தற்போது சுங்க சாவடி கட்டணம் உயர்வதால் வாடகை கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது.
    • வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசியதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றிரவு கன மழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை தொடங்கியது. இந்த மழை 8 மணி வரை தூறலாக நீடித்தது. பின்னர் 8 மணி முதல் 8.30 மணி வரை கன மழையாக கொட்டியது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை கன மழையாக பெய்தது. இடி, மின்னலுடன் திடீரென பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியது. சேலம் மாநகரில் 30 நிமிடத்தில் 5.6 செ.மீ மழை கொட்டியது.

    குறிப்பாக கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டு பாலம், பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர் பகுதி, அத்வைத ஆசிரம ரோடு, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, 4 ரோடு, 5 ரோடு, உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது. இதனால் வேலைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கலந்து ஓடிய சாக்கடை நீர் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும் வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசியதால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல சேலம் பழைய பஸ் நிலையம், கடை வீதி, புதிய பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பயணிகளும், பொதுமக்களும் தவியாய் தவித்தனர். கனமழை பெய்தபோது சேலம் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான வீரகனூர், ஓமலூர், தம்மம்பட்டி, கரியகோவில் அயோத்தியாப்பட்டணம் உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை கொட்டியது. மேலும் இடி, மின்னலுடன் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 8 மணி முதல் 8.30 மணி வரை சாரல் மழை பெய்தது. இந்த மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக சேலம் மநாகரில் 56 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. வீரகனூர் 45, ஓமலூர் 43, தம்மம்பட்டி 28, கரியகோவில் 17, தலைவாசல் 7, ஏற்காடு 6.2 , கெங்கவல்லி 5, ஆத்தூர் 3, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 213.20 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    • அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது.
    • 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது.

    சேலம்:

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

    இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    நடப்பாண்டு மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பொய்த்து போனது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 31 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று காலை 792 கன அடியாக சரிந்தது.

    தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 549 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

    நேற்று முன்தினம் 51.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலையில் 51 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 49.97 அடியாக குறைந்தது. 17.79 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

    1-8-2019 அன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. அதன் பிறகு 3 ஆண்டுகளுக்கு பின் இன்று மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

    இதனால் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி கரையோரமாக சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்றுவதற்கு போதிய தண்ணீர் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    அணை கட்டப்பட்ட பிறகு 1965-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1,052 கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கனஅடி தண்ணீர் வந்தது. 2005-ம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 300 கனஅடியும், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து 4 ஆயிரம் கன அடி வரையும் தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திய வருவதும் அதனை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் அடிக்கடி நடந்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இருந்து நேற்றிரவு சேலம் மாவட்டத்திற்கு லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் கடத்தி வருவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றிரவு ஓமலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓமலூரை அடுத்த ஜோடுகுழி பகுதியில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் தடை செய்யப்பட்ட 4 டன் போதை புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை மதிப்பீடு செய்யும் பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து லாரியுடன் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் லாரியை ஓட்டி வந்த பெங்களூரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணை முடிவில் டிரைவரை போலீசில் ஒப்படைக்கவும், வாகனம் மற்றும் குட்காவை கோர்ட்டில் ஒப்படைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    ஏற்காட்டில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து முண்டகம்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் கலெக்டர் கார்மேகம் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவினை தரமாகவும், சுவையாகவும், குறித்த நேரத்தில் சமைத்து வழங்கிய சமையலர் சோனியாவிற்கு பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

    மேலும், காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் நாள்தோறும் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது.
    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    சேலம்:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக் கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகைைய கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சேலத்தில் ரூ.1190 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.990 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை)அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சேலம் புதுரோடு பகுதியை சேர்ந்த குடும்ப தலைவி கவுசல்யா (25): மின்சாரம், காய்கறிகள் மற்றும் அத்தியா வசிய பொருட்கள் விலை உயர்ந்தி ருக்கும் நிலையில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை வரவேற்கிறோம்.

    சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் கலைமதி (30): அரசு இலவசமாக எந்த பொருளையும் தர வேண்டாம். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க வேண்டும். அந்த வகையில் கியாஸ் விலையில் ரூ.200 குறைத் துள்ளது வரவேற்கதக்கது. இதேபோல் காய்கறி உள்ளிட்டவற்றின் விலையை யும் கட்டுப் படுத்த வேண்டும்.

    அம்மாபேட்டையை சேர்ந்த பெரியநாயகி (40): ஏழை மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப் பட்டு உள்ளனர். குழந்தை களை படிக்க வைக்கவே சிரமப்பட்டு வருகிறோம். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே இருந்தது. தற்போது இந்த விலை குறைப்பு வரவேற்கத்தக்கது தான். மேலும் ரூ.200 குறைத்தால் நன்றாக இருக்கும்.

    மத்திய அரசு எந்த இலவசமும் கொடுக்காமல் பொதுமக்கள் வாழ்க்கை தரம் உயர நல்ல திட்டங்களை கொண்டு வந்து நாட்டு மக்கள் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.

    ×