குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். குடிநீர் அளவு குறித்து தனிக்குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் பேட்டியளித்தார்.
ஆத்தூர் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய காட்சி.
ஆத்தூர் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய காட்சி.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை குறித்து அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் கார்மேகம் ஆகியோர் ஆத்தூர் நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வாரிய அதிகாரியிடம் ஆத்தூர் நகராட்சிக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறித்து கேட்டறிந்தனர்.

தனிக்குழு

அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறும்போது, ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் அவை முறையாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் நாள் ஒன்றுக்கு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் தண்ணீர் வினியோகம் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்ஸ், மண்டல நகராட்சி இயக்குனர் பூங்கொடி, ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஆத்தூர் நகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணி, நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் சம்சுதீன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com