search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை ஐ.டி. நிறுவன ஊழியரின் மனைவி தற்கொலை
    X

    சென்னை ஐ.டி. நிறுவன ஊழியரின் மனைவி தற்கொலை

    • சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரையானூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து என்கின்ற கணேசன் (வயது 31). இவரது மனைவி சவுமியா (26). இந்த தம்பதிக்கு 5 வயதில் கபிலன் என்ற குழந்தை உள்ளது.

    பச்சமுத்து சென்னையில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று பச்சமுத்துக்கும், சவுமியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எடப்பாடி உட்கோட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சவுமியா உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சவுமியாவின் தந்தை மாணிக்கம் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மருமகன் பச்சமுத்து இரவு 10.45 மணிக்கு எனக்கு போன் செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டு விட்டார். உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறினார். இதனால் நானும் குடும்பத்தினரும் பதறியபடி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு எனது மகள் பிணமாக கிடந்தார். எனது மகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. தனது மகள் சவுமியா இறப்பு குறித்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுமியாவுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×