என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது.
    • இதையொட்டி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழா

    விநாயகர் சதுர்த்தி விழா வில், விநாயகருக்கு கொழுக் கட்டை, அவல், சுண்டல், சர்க்கரை ெபாங்கல், கரும்பு, பழங்களை வைத்து பக்தர்கள் படையலிடு வார்கள். தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் சதுர்த்திவிழா கோலா கலமாக கொண்டாடப்படும். 3-வது நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வ லமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும். இந்த நாட்க ளில் விநாயகர் ஊர்வலம் சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடு வார்கள்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சேலம் நெய்க்காரப்பட்டி உள்பட பல பகுதிகளில் விநா யகர் சிலைகள் அதிக அளவில் தயார் செய்யப்படு கிறது. இந்த சிலைகள் சேலம் 2-வது அக்ரஹாரம், அஸ்தம்பட்டி, அடிவாரம், குரங்குச்சாவடி, கடை வீதி, தேர்நிலையம், குைக, கொண்டலாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளி லும் சாலையோரம் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள் ளன. தற்போது விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி உள்ளது. கடைசி 2 நாட்களில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடிக்கும் என்பதால் அதிக அளவில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    10 ஆயிரம் வரை

    அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள இந்த சிலைகள் 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதில் லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம் ராஜ அலங்கா ரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, சிவ நர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்க வாகனம், அனுமன், நரசிம்மர், சித்தி, புத்தி ராஜ கணபதி உள்பட பல வடி வங்களில் சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட் டுள்ளன.

    • மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
    • போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.

    இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.

    இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
    • அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கலா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் நெஞ்சு பகுதி உணவு குழாயின் மேல் பகு தியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.

    டாக்டர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத்தலை வர் டாக்டர். சிவசங்கர், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்த குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர். மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
    • வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.

    பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.

    இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காரிப்பட்டி கருமாபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தியபோது லாரி மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே அஜித்குமார் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராசிபுரம் மங்களபுரத்தை சேர்ந்த சுந்தரம் (52) என்பவரை கைது செய்தனர்.

    • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
    • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

    சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

    இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. மேலும் நள்ளிரவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் சாரல் மழையாக நீடித்தது.

    நேற்று மதியம் சேலம் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் 2-வது நாளாக சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியது.

    வழக்கம் போல கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டுபாலம், பச்சப்பட்டி, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர் பகுதி, அத்வைத ஆசிரம ரோடு, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, 4 ரோடு, 5 ரோடு, உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது. இதனால் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு சென்று வீட்டிற்கு திரும்பியவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கலந்து ஓடிய சாக்கடை நீர் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும் வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. இந்த சாலைகளை கடக்க மணிக்கணக்கில் ஆனதால் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தனர்.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளில் தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையை தொடர்ந்து அரை மணிநேரம் பனிமூட்டமாக காட்சி அளித்தது. இன்று காலை வெயில் அடித்த படி இருந்தாலும் கடும் குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் வராததால் அஙகுள்ள முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 92 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 85.6, ஆனைமடுவு 49, சங்ககிரி 45.20, கெங்கவல்லி 20, ஏற்காடு 17.8, வீரகனூர் 9, ஓமலூர் 7, மேட்டூர் 6.80, எடப்பாடி 5.23, தலைவாசல் 5, கரியகோவில் 3, காடையாம்பட்டி 2.5, ஆத்தூர் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 351.13 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது.
    • அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் 3 மாநிலங்களில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து குறைந்து போதுமான தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வருகிறது.

    குறிப்பாக கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமம் அருகே உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு இன்று காலை முதல் வினாடிக்கு 1,365 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 100.34 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 180 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமம் அருகே உள்ள கபினி அணைக்கு 1,852 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையின் நீர்மட்டம் 73.80 அடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 279 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று வினாடிக்கு 9 ஆயிரத்து 180 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அமைந்துள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 792 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று காலை 549 கன அடியாக சரிந்தது.

    இன்று காலையில் நீர்வரத்து சற்று அதிகரித்து வினாடிக்கு 562 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டு வருகிறது.

    நேற்று முன்தினம் 49.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 49.97 அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்று காலையில் நீர்மட்டம் 48.92 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 17.13 டி.எம்.சி. ஆக உள்ளது.

    • கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரும், வேலகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி. மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்பவரும் கடந்த 10 ஆண்டாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த மே 5-ந் தேதியன்று பவித்ராவை அழைத்து சென்ற மோகன்ராஜ் காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கடந்த 5 மாதமாக சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் மனைவி பவித்ராவுடன் எந்த தொடர்பும் இல்லாமல் போனது.

    இதனால் 3 மாத கர்ப்பிணியான பவித்ரா வேலாக்கவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்கவிடாமல் பவித்ராவை தடுத்து விரட்டியுள்ளனர்.

    இதையடுத்து மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி கடந்த 23-ந் தேதி முதல் கணவர் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். வெயில், மழை என எதற்கும் அஞ்சாமல் 9-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

    மேலும் தனது கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என போலீசாருக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஒரு சிலர் வெளி யில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உள்ளே சந்தையில் வைத்து வியாபாரம் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • துண்டு பிரசுரங்களை வழங்கி மற்ற விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட தூண்டினர். \

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகளில் ஒரு சில நபர்களின் தலை யீட்டால் விவசாயிகள் கொண்டு வரும் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது குறித்து விவசா யிகள் உழவர் சந்தை அதிகாரி களிடம் அவ்வப்போது புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் ஒரு சிலர் வெளி யில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உள்ளே சந்தையில் வைத்து வியாபாரம் செய்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    7 பேர் சஸ்பெண்டு

    அப்போது சிலர் வெளியில் இருந்து காய்கறிகளை வாங்கி வந்து உழவர் சந்தையில் கடை வைத்து வியாபாரம் செய்ததா கவும், உழவர் சந்தை முன்பு காய்கறிகளை கொட்டி தன்னிச்சையாக விற்பனை செய்ததாகவும் கூறி இதில் தொடர்புடைய 7 பேரை 30 நாட்கள் விற்பனை செய்ய உழவர் சந்தை நிர்வாகம் தடை விதித்தது.

    போராட்டம்

    இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் சில விவசாயிகள் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதுடன், துண்டு பிரசுரங்களை வழங்கி மற்ற

    விவசாயிகளை போராட்டத்தில் ஈடுபட தூண்டினர். \இதையடுத்து அவர்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வயலாய்வு செய்து, வயலாய்வு ஆய்வ றிக்கையின்படி அவர்கள் மீண்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த சீசனில் தேவையான காய்கறிகள், பழங்கள் கிடைக்காவிட்டால், பக்கத்து மாவட்டங்களில் அதிக விளைச்சல் இருக்கும் போது இ.நாம் திட்டத்தின் மூலம் தேவைப்படும் மாவட்டங்களுக்கு காய்கறி களை கொண்டு வந்து உழவர் சந்தைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் காய்கறிகள் சேதம் ஆவதை தடுக்க முடியும். மேலும் விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படாது.

    நடவடிக்கை

    இந்த திட்டத்தில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை வாங்கி அதிக விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்ற னர்.இதுகுறித்து கேட்ட தற்காகவே விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.

    இந்த நிலையில் வேளாண் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களை கண்டித்து தமிழக விவசாய சங்கம் சார்பில் இன்று நாட்டாமை கட்டிடம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார்.

    மாநில பொது செயலாளர் பழனி முருகன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    ×