என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவருடன் உள்ளிருப்பு போராட்டம்
- கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
- கழிவு நீர் கால்வாயை தூர்வாரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை
மேட்டூர்
மேட்டூர் அருகே மேச்சேரி தேர்வு நிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. திமுக,வை சேர்ந்த சுமதி சீனிவாச பெருமாள் பேரூராட்சி தலைவராக இருந்து வருகிறார்.
சுகாதார சீர்கேடு
11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற் றம் வீசி வருவதால் அப்பகு தியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் கலந்து மழை நீர் வீட்டுக்குள் செல்கிறது. 11-வது வார்டு அண்ணா நகர் பகுதி சேர்ந்த தி.மு.க.
கவுன்சிலர் தனம் கழிவு நீர் கால்வாயை தூர்வாரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் தனம் மேச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் தனது கண வர் பிரசாத்துடன் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
குற்றச்சாட்டு
இது குறித்து கவுன்சிலர் தனம் கூறுகையில் எங்கள் வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை.
இதுகுறித்து பேரூராட்சி செயலாளரிடம் கேட்டால் தலைவரிடம் கேட்குமாறும், தலைவரி டம் கேட்டால் அதிகாரிகளை கேட்கு மாறு அலைக்கழிப்பதாக குற்றச் சாட்டு கூறினார்.
பின்னர் மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியதால் கவுன்சிலர் புறப்பட்டு சென்றார்.






