என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் ஜெயில் வார்டனின் செல்போன் ஆய்வு
- வீட்டிற்கு திரும்பும் போது வார்டன் ஒருவர், அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தவறாக பேசியுள்ளார்.
- ஜெயில் வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
சேலம்
சேலம் மத்திய ெஜயிலில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாமக்கல்லை சேர்ந்த திருட்டு வழக்கு கைதியும் உள்ளார். கடந்த 24-ந்தேதி இவரை பார்க்க அவரது மனைவி ஜெயிலுக்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் போது வார்டன் ஒருவர், அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தவறாக பேசியுள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலமாகவும் பேசி தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இைதயடுத்து ஜெயில் வார்டனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஜெயில் சூப்பிரண்டிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வார்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட கைதியின் மனைவியிடம் செல்போன் வாட்ஸ் அப்பில் வார்டன் என்ன என்ன தகவல் அனுப்பினார்? என கேட்டோம். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் வார்டன் செல்போனில் என்ன பேசி னார்? என்பது குறித்து ஆய்வு செய்ய சேலம் மாநகர் சைபர் கிரைம் பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் வார்டன் பேசியது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






