என் மலர்
சேலம்
- சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் குணசேகரன் (40). இவரது மனைவி மோகனா (35). கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் கடந்த 8 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மோகனாவுடன் குணசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதுடன் சந்தேகப்பட்டு தாக்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோகனா இன்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மண்எண்ணை கேனுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். பின்னர் மோகனாவின் சொந்த ஊர் ஓமலூர் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
- சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400,
சேலம்:
சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டுக்கு கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வருகிற 6 ந் தேதி புதன்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதையொட்டி சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு மல்லி கிலோ ரூ.250, ரூ.300 என்கிற விலைகளில் விற்கப்பட்டது. ஆனால் இன்று குண்டு மல்லி கிலோ ரூ.400- க்கு விற்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பண்டிகை சீசன் என்பதால் பூக்கள் விலை சற்று உயர்ந்து உள்ளது. ஒரு சில ரகங்கள் விலை குறைந்தும் உள்ளன. சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (கிலோ கணக்கில்) : குண்டு மல்லி - ரூ.400, முல்லை - ரூ.240, ஜாதி மல்லி - ரூ.260, காக்கட்டான் - ரூ.100, கலர் காக்கட்டான் - ரூ.100, மலை காக்கட்டான்- ரூ.100, சி.நந்தியா வட்டம் - ரூ.200, சம்மங்கி - ரூ.100, சாதா சம்மங்கி - ரூ.100, அரளி - ரூ.40, வெள்ளை அரளி - ரூ.60, மஞ்சள் அரளி - ரூ.60, செவ்வரளி - ரூ.80, ஐ.செவ்வரளி - ரூ.50, நந்தியா வட்டம் - ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது.
- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
சேலம்:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்ைட மாநி லங்களில் இருந்தும் ஏராள மான சுற்றுலாபயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக விடுமுறை நாட்க ளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் .
ஏற்காட்டில் சாரல் மழை
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை சாரல் மழை யாக நீடித்தது.இதனால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
இதை தொடர்ந்து சனிக்கிழமையான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் சாரை சாரையாக வர தொடங்கினர். குடும்பம் , குடும்பமாகவும், காதல் ஜோடிகளும் அதிக அள வில் வாகனங்களில் ஏற்காட்டிற்கு வந்தனர்.இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, மீன் பண்ணை, சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், படகு குழாம் உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. குறிப்பாக படகு குழாமில் குடும்பத்துடன் உற்சாகமாக சவாரி சென்று மகிழ்ந்தனர்.
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்ததால் கடைகளி லும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் தங்கும் விடுதிகளும் கூட்டம் நிரம்பி காட்சி அளித்தன. இதனால் லாட்ஜ் உரிமை யாளர்கள் மற்றும் வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர் அணை
விடுமுறை நாட்களில் வழக்கமாக மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதன்படி மேட்டூர் அணை பூங்காவிலும் இன்று காலை முதலே சுற்றுலா பய ணிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அணை முனி யப்பனை தரிசனம் செய்து மீன் இறைச்சிகளை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.
மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனர். அங்குள்ள பாம்புகள் , முதலைகளையும் ஆர்வத்து டன் பார்வையிட்டனர். அணையின் பவள விழா கோபுரத்திற்கும் சென்று அணையின் அழகை பார்த்து ரசித்தனர். காவிரியியில் குடும்பத்துடன் உற்சாகமாக ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
உயிரியல் பூங்கா
இேத போல குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிலும் காலை முதலே சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் காதல் ஜோடிகள் அதிக அள வில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள குரங்கு கள், மயில்கள், மான்கள், பாம்புகள், பறவைகளையும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பட்டாம்பூச்சி பூங்கா, செயற்கை அருவி முன்பு நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.
- கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே அணியாபுரம் ஏ.டி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (62).
டிரைவர்
இவர் கரூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பஸ் டிரை வராக கடந்த 2 வருடமாக பணியாற்றி வந்தார்.
கனகராஜ் தினசரி மாலை கல்லூரி மாணவ, மாணவிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்சை தனது வீட்டின் அருகே நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் அணியாபுரம் 4 ரோடு பகுதியில் கல்லூரி பஸ்சில் மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு கனகராஜ் சென்று கொண்டிருந்தார்.
நெஞ்சுவலி
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.
கனகராஜ் பஸ்சை நிறுத்திய அடுத்த நிமிடமே டிரைவர் இருக்கையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள் ஓடிச் சென்று கனகராஜை பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து உடனடி யாக ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கனகராஜை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகார்
இது குறித்து கனக ராஜின் மனைவி ஜோதி (48) மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவர் கனகரா ஜூக்கு 2 மகள்கள் உள்ளனர். கல்லூரி பஸ்சை ஓட்டிக் கொண்டி ருந்தபோதே நெஞ்சு வலியால் டிரைவர் இறந்த சம்பவம் மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
- அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
குடிசை சரிந்து விழுந்தது
இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.
இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
பெண் பலி
இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சை
படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது.
- இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது.
நாடு முழுவதும் வயதில் மூத்தோர்களுக்கு கற்பிக்கும் நோக்கில், புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தை மத்திய அரசு தொடங்கி யுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டா ரத்தில் வாழப்பாடி, பேளூர் பேரூராட்சிகள் மற்றும் 20 கிராம ஊராட்சிகளிலும் புதிய பாரத எழுத்த றிவு இயக்கம் தொடங்கப் பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், வயதில் மூத்தவர்களுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கும் பணியை தொடங்கினர்.வாழப்பாடி அண்ணா நகர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் நடைபெற்ற தொடக்க விழாவில், பள்ளி தலைமை ஆசிரியை ஷபிராபானு, தன்னார்வலர்கள் ஈஸ்வரி, சந்தியா ஆகியோருக்கு சான்றிதழ்களையும், வயதில் மூத்தவர்களுக்கு பயிற்சி ஏடுகளையும் வழங்கினார். வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து மையங்களிலும் பயிற்சியில் கலந்து கொண்ட வயதில் மூத்தோர்களுக்கு, எழுது பொருட்கள், பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டது.
- ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.
- இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி அய்யந்துறை (47). கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் நேற்று மாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு உறங்க சென்றார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர். மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்றும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாழப்பாடி பகுதியில் உள்ள மக்கள் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறைகளை இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
- வினோத வழிபாட்டால் தொடர்ந்து 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள மக்கள் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறைகளை இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
குறிப்பாக வறட்சி நிலவும் காலங்களில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்துதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லைச்சாமிக்கு பன்றி பலி கொடுத்தல் போன்ற வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் வாழப்பாடி அடுத்த மேலூர் கிராமத்தில் மழை பொழிய வேண்டி கடந்த 3 நாட்களாக சிறுவர்-சிறுமியர்கள், பெண்கள் வீடு வீடாக சென்று உணவு யாசகம் பெற்று அதனை அங்குள்ள மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு படையல் வைத்து கும்மியடித்து வினோத வழிபாடு நடத்தினர். இந்த வினோத வழிபாட்டால் தொடர்ந்து 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது.
- மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக நேற்றும் கனமழை பெய்தது.
சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணயளவில் தொடங்கிய மழை விடிய, விடிய சாரல் மழையாக நீடித்தது. இந்த மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட அனைத்து பகுதிகளிலும் பெய்தது.
கடந்த சில நாட்களாக சேலம் மாநகரில் மழை பெய்து வருவதால் பல சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மழையை தொடர்ந்து மாநகர் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி தலைவாசல் ஆகிய பகுதிகளில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பயிர்களுக் கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக நீடித்தது. இந்த மழையால் ஏற்காட்டில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. சனிக்கிழமையான இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 58.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 44, கெங்கவல்லி 40, ஏற்காடு எடப்பாடி 37, தலைவாசல் 37, பெத்தநாயக்கன் பாளையம் 9.4, தம்மம்பட்டி 9, சங்ககிரி 9, சேலம் 8.5, காடையாம்பட்டி 8, ஏற்காடு 7.20, வீரகனூர் 7, ஓமலூர் 5.02, கரியகோவில் 4, ஆனைமடுவு 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 286.72 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லி மலை, மோகனூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது . இந்த மழையால் சாலைகள், வயல் வெளிகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 39 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மோகனூர் 31, எருமப்பட்டி, குமாரபாளையம் 4, நாமக்கல் 2.2, ராசிபுரம் 6, சேந்தமங்கலம் 13, திருச்செங்கோடு 2, கலெக்டர் அலுவலகம் 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.2 மி.மீ. மழை பெய்துள்ளது.
- கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
சேலம்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பர்வாலா 472, பெங்களூரு 450, டெல்லி 490, ஐதராபாத் 450, மும்பை 505, மைசூரு 450, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 410, கொல்கத்தா 550.
பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
- தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேவகவுடா போட்டியிடவில்லை. இதையடுத்து அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அதில் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ரூ. 23 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், எனவே அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா நிருபர்களிடம் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்றார். தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையில் மூழ்கி இருந்த ஜல கண்டேஸ்வரர் கோவில் நந்திசிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகிறது.
மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. அணையின் பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் நிலம் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.
தண்ணீர் குறைந்து மேட்டூர் அணை குட்டை போல் மாறியது. இதனால் நீர்த்தேக்க பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது.
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 16.86 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.86 டி.எம்.சி.தண்ணீரே பாசனத்துக்கு திறக்கப்படும்.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2870 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7078 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 73.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1979 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 78 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.






