என் மலர்
நீங்கள் தேடியது "Kidnapped by car"
- அத்தனூர்பட்டி ஊராட்சி வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகளான சிறுமி, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற இச்சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அத்தனூர்பட்டி ஊராட்சி வேட்டைக்காரனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் மகளான சிறுமி, 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற இச்சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே, வாழப்பாடி பழைய பஸ் நிலையம் அருகே பள்ளி சீருடையில் புத்தகப்பையுடன் தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்த சிறுமியை மீட்ட அப்பகுதி சேர்ந்தவர்கள், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தன்னை யாரோ இருவர் குறிச்சியில் இருந்து காரில் ஏற்றி வந்ததாகவும், வாழப்பாடியில் கார் நின்றதும் இறங்கி தான் தப்பித்து ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்த இச்சிறுமியை அவரது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். ஆனால் இச்சிறுமியை யாரும் காரில் கடத்தி வந்ததாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவில்லை.






