என் மலர்
சேலம்
- சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது.
- தி.மு.க. இளைஞரணி மாநாடு நடைபெறும் இடத்தில் அமைச்சர் கே. என்.நேரு ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளை யத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17 -ந் தேதி தி.மு.க.வின் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரமாண்ட பந்தல்
இதற்காக அந்த பகுதியில் பிரமாண்டமான விழா பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இந்த பணியினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., , மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, நெசவாளர் அணி ஆறுமுகம், முரா.கருணாநிதி, அ.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி , சிவராமன் தங்கமுத்து (எ) மருதமுத்து , பேரூர் செயலாளர்கள் பாபு ( எ) வெங்கடேஷ்வரன், வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
- தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.
சேலம்:
சேலம் அன்னதானப்பட்டி வேலுநகர் டாஸ்மாக் பாரில் நேற்று மது குடிக்க வந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு சக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தார்.
குடிபோதையில் தகராறு
அப்போது போதையில் இருந்த 3 பேர் ஏட்டுவிடம் தரக்குறைவாக பேசி தாக்க முயன்று மது பாட்டிலை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இது குறித்து பார் சப்ளையர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் ேபரில் அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் லைன்மேடு புது தெருவை சேர்ந்த ஷாருக்கான் (24), சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்த பைேராஸ்கான் (25) , திருச்சி புது கிளை ரோடு பஷீர் அகமது (42) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல்
இதேபோல சத்திரம் டாஸ்மாக் பாரில் பிரச்சினை செய்வதாக செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு எஸ்.ஐ.செல்வராஜ் அங்கு விைரந்து சென்றார். அப்போது போதையில் இருந்த வெங்கட்ராபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (39 )என்பவர் செல்வராஜை கடுமையாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்து செவ்வாய்ப்டே்டை போலீசார் மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.
- சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகுடஞ்சாவடி:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரையானூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து என்கின்ற கணேசன் (வயது 31). இவரது மனைவி சவுமியா (26). இந்த தம்பதிக்கு 5 வயதில் கபிலன் என்ற குழந்தை உள்ளது.
பச்சமுத்து சென்னையில் தங்கி ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று பச்சமுத்துக்கும், சவுமியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சவுமியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எடப்பாடி உட்கோட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சவுமியா உடலை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சவுமியா உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சவுமியாவின் தந்தை மாணிக்கம் கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் எனது மருமகன் பச்சமுத்து இரவு 10.45 மணிக்கு எனக்கு போன் செய்து சவுமியா தற்கொலை செய்து கொண்டு விட்டார். உடனடியாக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு கூறினார். இதனால் நானும் குடும்பத்தினரும் பதறியபடி எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு எனது மகள் பிணமாக கிடந்தார். எனது மகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது மகள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விபரம் தெரியவில்லை. தனது மகள் சவுமியா இறப்பு குறித்து கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுமியாவுக்கு திருமணம் ஆகி 6 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
- ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
- திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் தலைவாசல் உள்பட பல பகுதகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்திலும் நேற்று இரவு 7 மணியளவில் சூறைக்காற்றுடன் லேசான மழை தொடங்கியது. இதனால் கனமழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 42, எடப்பாடி 35, மேட்டூர் 34.40, தலைவாசல் 19, ஆத்தூர் 11.60, காடையாம்பட்டி 11, ஓமலூர் 5, சேலம் 2.4, ஏற்காடு 2.2, பெத்தநயாக்கன்பாளையம் 2, கரியகோவில் 1, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 209.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவமழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு பெரிய அளவில் இல்லை.
இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 29-ந்தேதி கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், 30-ந்தேதி 6,398 கன அடி தண்ணீரும், 31-ந்தேதி 9,279 கன அடி தண்ணீரும், 1-ந்தேதி 9,180 கன அடி தண்ணீரும் நீரும் திறந்து விடப்பட்டது.
நேற்று முன்தினம் (2-ந்தேதி) கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 128 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீரும் என மொத்தம் 9,128 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நீர் திறப்பு குறைக்கப்பட்டு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 6, 436 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
இன்று மேலும் நீர் திறப்பு குறைக்கப்பட்டு வினாடிக்கு 7,181 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,181 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,199 கன அடியாகவும், நீர்மட்டம் 99.32 அடியாகவும் உள்ளது. அதேபோல் கபினி அணையில் இருந்து 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 794 கன அடியாகவும், நீர்மட்டம் 73.69 அடியாகவும் உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மேட்டூர் அணை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று மேட்டூரில் 34.40 மீல்லிமிட்டர் மழை பெய்தது.
இதனால் நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 5,018 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 6,430 கன அடியாக அதிகரித்தது.
மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 8,060 கனஅடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் படிப்படியாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 48.23 அடியாக உள்ளது.
- அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது
- வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேட்டூர்:
ஜலகண்டாபுரத்தில் பருவமழை பெய்து வருவதால் ஜலகண்டாபுரம் ஏரியில் நங்கவள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் அரசமரம் ஏரி நீர்நிலை பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணிகள் துவைப்பது மாணவர்கள் நீர்நிலை பகுதிக்கு செல்ல கூடாது என்றும் நீர்நிலையில் தவறி விழுந்தவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேட்டூர்:
மேட்டூர் -பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ளது மேச்சேரி பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் நுழைவுப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சாக்கடை நீர் தேங்கி நின்றது. கனரக வாகனங்க ள்செல்லும்போது இருசக்கர வாகனங்களில் செல்வோரின் மீது சாக்கடை வாரி இறைக்கப்படுகிறது. இந்தநிலையில் பல்வேறு முறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.மான கார்த்திக் போராட்டத்தை விளக்கிப் பேசினார், மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மேச்சேரி ஒன்றிய பா.ம.க. செயலாளர் துரைராஜ் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது.
சேலம்:
தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ேஹப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர். வாரம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மற்றும் பணி புரியும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் ஏராளமானோர் இதில் பங்கேற்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் சேலத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இைத தொடர்ந்து இன்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர் . பின்னர் அங்கு இசைக்கப்பட்ட பாடல்களுக்கு ஏற்ப அவர்கள் உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து டிரம்செட், பேண்ட் வாத்தியங்களும் அங்கு இசைக்கப்பட்டன. அந்த இசைக்கேற்ப அனைவரும் கைகளை உயர்திய படி ஆடி, பாடி அசத்தினர். மேலும் சர்ட்கள் அணிந்த படி ஆடி பாடிய இளைஞர்கள், இளம்பெண்கள் கலர் பேப்பர்களையும் வீசி, விசில் அடித்த படி உற்சாகத்துடன் துள்ளி குதித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக இளம்பெண்கள் பலர் விசில்களை பறக்க விட்ட படி துள்ளி குதித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டது. சேலத்தில் முதல் நாளாக இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலேயே பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்த பகுதியே களை கட்டியது.
இதைெயாட்டி சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வணிகவரித்துறை அலுவலகம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதற்கிடையே அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளுக்கான மின் வயரில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.
இதனால் மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு அந்த வயர்கள் சரி செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியதுடன் களை கட்டியது. மேலும் இந்த விழாவை மாதத்திற்கு ஒரு முறை நடத்த முடிவு செய்துள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
- சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.
- இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டையை அடுத்த மாசிநாயக்கன்பட்டி யில் ஒரு மளிகை கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் வியாபாரம் முடிந்த பின்னர் நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் கடையை பூட்டி் விட்டு சென்றனர்.
இந்தநிலையில் இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையின் கல்லாவில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணமும் மாயமாகி இருந்தது.
இதனால் நேற்றிரவு யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பணத்தை எடுத்து சென்றதை அறிந்த கடை உரிமையாளர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
- கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7,436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நேற்று வினாடிக்கு 7,128 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 6, 436 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது
அதுபோல் கபினி அணையில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 7,436 கன அடி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.
இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தான காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ஏராளமான மூட்டைகள் கிடந்தது. இதையடுத்து போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஏராளமான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் போதை பொருள் கடத்தி வந்த போது விபத்தில் சிக்கியதால் டிரைவர் தப்பி ஓடியது தெரியவந்தது. காரில் மொத்தம் 42 மூட்டைகளில் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேட்டூர் அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து போதிய அளவில் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படவில்லை. தென்மேற்கு பருவ மழையும் தீவிரம் அடையாததால் கடந்த ஆகஸ்டு மாதம் முழுவதும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் அளவு பெரிய அளவில் இல்லை.
இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் கடந்த 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் 12-ந்தேதி வரை அதாவது 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 29-ந்தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், 30-ந்தேதி 6 ஆயிரத்து 398 கன அடி தண்ணீரும், 31-ந்தேதி 9 ஆயிரத்து 279 கன அடி தண்ணீரும், 1-ந்தேதி 9 ஆயிரத்து 180 கன அடி தண்ணீரும் நேற்று (2-ந்தேதி) 9 ஆயிரத்து 128 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முதல் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் நீர்வரத்து வினாடிக்கு 562 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 5,018 கன அடியாக அதிகரித்தது.
மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து 6,430 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 48.48 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 48.24 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 16.72 டி.எம்.சி.யாக உள்ளது. ஒரு வாரத்தில் மேட்டூர் அணையில் 5 அடிக்கு கீழ் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






