கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட வாலிபர் போலீசாரை பார்த்து தப்பி ஓடியபோது கால் உடைந்தது

பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட வாலிபர் போலீசாரை பார்த்து தப்பி ஓடியபோது கால் உடைந்தது
Published on

சேலம்:

சேலம் ஜான்சன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரதாப் என்கிற சுகில் (வயது 22). இவர் உறவினர் ஒருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அவர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் காக்கையன் சுடுகாடு அருகே இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில போலீசார் அங்கு சென்றனர். அவர்களைப் பார்த்து பிரகாஷ் தப்பி ஓடி அங்குள்ள காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார். அப்போது பிரகாஷ் கால் உடைந்தது. அவரை பிடித்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com