என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகூர்த்த நாட்களையொட்டி சேலம் கோட்டத்தில் 150 சிறப்பு பஸ்கள்
- ஒவ்வொரு வாரமும், வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம்:
ஒவ்வொரு வாரமும், வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களையொட்டி சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பஸ்கள்
அதன் தொடர்ச்சியாக நாளை 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலம் கோட்டத்தில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த பஸ்கள் சேலம் புறநகர் பேருந்து நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் இயக்கப்படுகிறது.
மேலும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரை, நாமக்கல்லில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர் ஆகிய பகுதிகளுக்கும் முன்பதிவு மையங்கள் வழியாகவும், இணைய தளம் வழியாகவும் முன்பதிவு நடைபெறுகிறது.
எனவே பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்று போக்கு வரத்து கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள் ளனர்.






