என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவி தற்கொலை முயற்சி
- கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் ஐஸ்வர்யா (18).
- தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த மணியார்குண்டம் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வரும், ஆத்தூர் அடுத்த வீரகனூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா (18) என்பவர், மதிய உணவு இடைவேளை நேரத்தில் தொழிற் பயிற்சி மையம் அருகிலுள்ள வேலியில் இருந்த விஷத் தன்மை கொண்ட அரளி விதையைப் பறித்து தின்று தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த இவரை மீட்டு விடுதி காப்பாளர் சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த மாணவி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






