என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.
- அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
நாமக்கல்:
நாமக்கல் வசந்தபுரம் நாகராஜ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அருள் (வயது 52). இவர் அதே பகுதியில் ெசாந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் கோபால் (42) என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து நேற்று இரவு லாரியை வீட்டின் முன்பு சாலையில் நிறுத்தி இருந்தார்.
அரிவாள் வெட்டு
அப்போது அந்த வழியாக லாரியில் வந்த அருள், கோபாலிடம் லாரியை ஓரமாக நிறுத்தாமல் ஏன் இடையூறாக நிறுத்தி இருக்கிறாயே, நான் எப்படி போவது என கூறி யுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள் லாரியில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கோபாலின் கையை வெட்டினார். இதனால் கோபால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர்.
கைது
இதையடுத்து கோபாலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் நாமக்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குப்பதிவு செய்து அருளை கைது செய்தார்.
- நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
- பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த வணிக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த தனியார் டிரான்ஸ்போர்ட் ஊழியர் வினோத்குமார் என்பவர் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை வணிக வளாகம் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் இது பற்றி நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது
47) என்பவர் மோட்டார்
சைக்கிளை திருடியது தெரிய
வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அரசு மதுபான கடையின் அருகில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அங்காளக் கோட்டை பகுதியை சேர்ந்த ரகுபதிராஜா (25), சொக்கநாதபுரம் அருகே போரடப்பு பகுதியை சேர்ந்த அஜித் (25), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கேத்தங்கால் தெற்கு தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (20) ஆகிய 3 பேர் மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 76 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.
- பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பா ளையத்தில் உள்ள காவிரி கரையோரத்தில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சாமி கோவில் வளாகத்தில் சுமார் 18 அடி உயரத்தில் 750 கிலோ எடையில் இரும்பாலான அரிவாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கருப்பண்ண சாமி மற்றும் 18 அடி உயரமுள்ள அரிவாள் ஆகியவற்றிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கருப்பண்ணசாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பிலிக்கல்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல்லில் உள்ள பஸ் நிலையத்தையொட்டி உள்ள ஒரு சில கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் தலைமையில் சமூக அலுவலர் மணிகண்டன், கிஷோர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் என 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை நாமக்கல் பஸ் நிலையத்தை யொட்டியுள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒரு கடையில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை
- பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை ஊராட்சி பாம கவுண்டம்பாளையத்தில் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் விண்வெளியில் தரையிறங்கும் நிகழ்ச்சியினை ஊராட்சித் தலைவர் பூங்கொடி குணசேகரன் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிராம பொதுமக்கள் மகிழ்ச்சியினை தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கியும், பட்டாசு வெடித்தும் சந்தோசமாக கொண்டாடினார்கள். குன்னமலை ஊராட்சி பாமகவுண்டம்பாளையம் பகுதியில் இருந்துதான் சந்திராயன் -3 விக்ரம் லேண்டர் பரிசோதனைக்காக சந்திரனில் இருக்கும் மண் போலவே இந்த ஊரில் இருக்கிறது என்று எடுத்துச் சென்று விக்ரம் லேண்டர் தரை இறங்கும் நடவடிக்கைக்கு ஆய்வுகளை மேற்கொண்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமத்தில் உள்ள பாறைகள் நிலவு மண்ணுடன் 99 சதவீதம் ஒத்துப் போவது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த பாறைகளை வெட்டி எடுத்து சேலத்தில் உள்ள குவாரியில் மண்ணாக மாற்றி 50 டன் அனார்தசைட் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த நிலவு மாதிரி மண்ணில் தான் சந்திராயன் -3 ரோவரும் இறங்கி பழகி பயிற்சி எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
- நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி யில் உள்ள 33 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கவும், வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கவும் பேட்டரி மூலம் இயங்கும் ரூ.54 லட்சம் மதிப்பிலான 27 தள்ளுவண்டிகள் மற்றும் ரூ.95 லட்சம் மதிப்பிலான 13 இலகுரக வாகனம் ஆகியவை பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டு வாகன பயன்பாட்டை தொடங்கி வைத்தனர்.
நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவ ணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர் மன்ற துணைத் தலைவர், நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல், நகர துணை செயலாளர் ராஜவேல், நகர்மன்ற உறுப்பி னர்கள் செல்லம்மாள் தேவராஜன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், சண்முக வடிவு, திவ்யா வெங்கடேசன், தாமரைச்செல்வி மணிகண்டன், டி.என்.ரமேஷ், முருகேசன், டபிள்யூ.டி.ராஜா, அண்ணாமலை, அடுப்பு ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
- விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வும் கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
பிரசார வாகனங்கள்
இந்த நிகழ்ச்சிக்கு கபி லர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமை வகித்தார். பிர சார வாகனங்கள் கபிலர் மலை வட்டார வேளாண் மைத்துறை அட்மா திட்ட தலைவர் சண்முகம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் சார்பு துறைகளின் அனைத்து நிலை அலுவ லர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் மற்றும் ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தியும், சிறுதானியங்களில் உள்ள ஊட்டமிகு சத்துக்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் வாகனங்களில் பதாகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானிய சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
- கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குமாரபாளையம்:
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
மாதம் ரூ.1000 வழங்கப்ப
டும் கலைஞர் மகளிர் உரி
மைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார்.
- குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கட்டமரவாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (64). எலக்ட்ரீசியன் தற்பொழுது சாமியானா பந்தல் அமைக்கும் பணி செய்துவருகிறார். இந்நிலையில் சுப்பிரமணி தனது மோட்டார் சைக்கிள் மோகனூர்- பரமத்தி வேலூர் சாலையில் இரவு சுமார் 7.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பொய்யேரி அருகே உள்ள திருமணிமுத்து ஆறு பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் சாலையில் காமாட்சி நகர் செல்வதற்காக குப்புச்சிபாளையத்தை சேர்ந்த மோகன்( 40) என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சுப்பிரமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. கார் டிரைவர் மோகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சுப்பிரமணி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைபார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். அங்கு சுப்பி ரமணியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிர மணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி
வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மோகன் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
- அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. இங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன டிரைவர்கள், அலுவலக பணியாளர்கள் என 90 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சம்பளம் தரவில்லை என வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இது குறித்து நேற்று அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர்களையும், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குருசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் மகளிர் சுய உதவி குழு மூலம் துப்புரவு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் தூய்மை பணியாளர்கள் அனைவருமே சம்பள பாக்கி எதுவும் இல்லை. சம்பள தொகை வங்கிக் கணக்கில் கடந்த 5-ந் தேதி வந்துவிட்டது என தெரிவித்தனர்.
இதனால் பணியாளர்க ளுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என சம்பள பாக்கி உள்ளதாக வாட்ஸ் அப் குழுவில் வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு விடம் கேட்டபோது:-
வேலூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் சம்பள பாக்கி என வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் . அது முற்றிலும் தவறான தகவல். தூய்மை பணியாளர்களிடம் நடத்திய விசாரணையில், சம்பள பாக்கி நிலுவையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். அனைத்து பணியாளர்க ளுக்கும் காலதாமதம் இன்றி உரிய நாட்களில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
- ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வில்லி பாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி , சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளை யம், பெரியாக்கவுண்டம் பாளையம்,தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரி பாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவி பாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.






