நாமக்கல்லில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது 47) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
Published on

நாமக்கல்:

நாமக்கல் டவுன் போலீஸ் நிலையம் எதிரே துறையூர் சாலையில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு நிதி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தினமும் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வேலை நிமித்தமாக இங்கு வந்து செல்வது வழக்கம். இதனால் இந்த வணிக வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்லை சேர்ந்த தனியார் டிரான்ஸ்போர்ட் ஊழியர் வினோத்குமார் என்பவர் வேலை நிமித்தமாக மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார்சைக்கிளை வணிக வளாகம் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமார் இது பற்றி நாமக்கல் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இைதயடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அதில் பெரம்பலூரை சேர்ந்த ஹரிகரன் (வயது

47) என்பவர் மோட்டார்

சைக்கிளை திருடியது தெரிய

வந்தது. இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com