search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Publicity"

    • கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.
    • விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஊட்டமிகு சிறுதானியங்கள் சாகுபடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது மக்களிடையே அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வும் கபிலர்மலை வட்டா ரத்திலுள்ள 30 கிராமங்க ளிலும் விழிப்புணர்வு பிரசாரம் 5 வாகனங்கள் மூலம் நடைபெற்றது.

    பிரசார வாகனங்கள்

    இந்த நிகழ்ச்சிக்கு கபி லர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமை வகித்தார். பிர சார வாகனங்கள் கபிலர் மலை வட்டார வேளாண் மைத்துறை அட்மா திட்ட தலைவர் சண்முகம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் சார்பு துறைகளின் அனைத்து நிலை அலுவ லர்கள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் மற்றும் ராகி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்ய வலியுறுத்தியும், சிறுதானியங்களில் உள்ள ஊட்டமிகு சத்துக்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் வாகனங்களில் பதாகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. சிறுதானிய சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டங்கள், உயிர் உரங்கள் மற்றும் இயற்கை பயிர் பாதுகாப்பு மருந்துகள் வட்டார வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயி களுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில், மாவட்ட கலால் துறை சார்பில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.
    • அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமை யானவர்களை மீட்டு நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சார்பாக, நாடகக் கலைஞர்களைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பஸ் நிலை யம் அருகே, சேலம் வட்டாட்சியர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது.

    கிராமிய பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், குடிப்பழக்கத்தினால் சமூக மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள், உயிரிழப்புகள், பொருளா தார பாதிப்புகள் குறித்து கிராமிய கலைஞர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பிர சாரத்தில், காலால் வருவாய் ஆய்வாளர் ஹன்சாரி கான், வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் கார்த்திக், வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி, பழந்தின்னிப்பட்டி உள்பட 24 ஊராட்சிகளிலும் தூய்மை பணி தொடங்கியது.
    • நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    ராசிபுரம்:

    தமிழக அரசு சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற சுகாதார இயக்கத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் பகுதியில் வருகிற அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள், சந்தைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், நீர்நிலைகள், சுகாதார வளாகங்கள் தூய்மைப்படுத்துதல் பணிகள் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மதியம்பட்டி, பழந்தின்னிப்பட்டி உள்பட 24 ஊராட்சிகளிலும் தூய்மை பணி தொடங்கியது. மேலும் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் மாதவன், அரசு அலுவலர்கள் செய்திருந்தனர்.

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி. #ModiGovernment #Modi #Advertisement
    மும்பை:

    மும்பையை சேர்ந்த தகவல் அறியும் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ModiGovernment #Modi #Advertisement #Publicity
    நகரத்தார் மக்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உலகம் போற்றும் தமிழ்நாட்டு கலாசாரத்தில் தனித்த முத்திரையும், தனிச் சிறப்பும் கொண்டு, அருந்தமிழ் மொழிக்கு அளப்பரிய தொண்டாற்றிய பகுதி செட்டிநாடும், அங்கு வாழும் நகரத்தார் மக்களும். எதற்கும் பிரயோஜனம் இல்லாத ஒரு அரசியல் தொடர்பான கேள்விக்கு மிகப்பெரிய நகைச்சுவையாக பதில் சொல்வதாக கருதி, இறைப்பணியையும், தூய தமிழ் பணியையும் செவ்வனே செய்து அமைதியான வாழ்க்கை முறையை பின்பற்றும் பாசமிக்க நகரத்தாரை தொடர்புபடுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து கண்டனத்திற்குரியது.

    அமைச்சர் பதவியில் உள்ளவர் பொறுப்பற்ற முறையில் இதைப்போன்ற கருத்துகளை கூறி, குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த முற்படும் செயல்களை இத்துடன் நிறுத்திக்கொண்டு, தன் கருத்துக்கு வருத்தம் என்று சொல்லி சமாளிக்கும் வேலையை விட்டுவிட்டு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×