search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advertisements"

    • கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
    • எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், மக்களை ஏமாற்றி, திசைதிருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    மேலும், பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி முன்னதாக குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் (2014- 2024) மோடி அரசு தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.2,974 கோடி செலவிட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

    தொலைக்காட்சியை தவிர, எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.

    இதற்கிடையே, பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பாஜக அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.

    • தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
    • அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) அனைத்து வகையான திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது.

    18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்த திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் போதும், எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் விரும்பினால் யூ சான்றிதழை விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

    சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி. #ModiGovernment #Modi #Advertisement
    மும்பை:

    மும்பையை சேர்ந்த தகவல் அறியும் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ModiGovernment #Modi #Advertisement #Publicity
    ×