என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • இரவு சுரேஷ் குடிபோதையில் எங்களது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீண்டும் கண்டித்தேன்.
    • நள்ளிரவு அவரது வீட்டு முன்பு உடலையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பிச் சென்றேன்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த ராமநாதபுரம் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி அழகம்மாள் 12 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார். சுரேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுரேஷ் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடினர். நேற்று அதிகாலை தலையில் பலத்த காயங்களுடன் சுரேஷ் அவரது வீட்டு முன்பு இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சேந்தமங்கலம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுரேஷுக்கும், எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

    இதில் ஏற்பட்ட தகராறில், அவரது 19 வயது மகனான என்ஜினீயரிங் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சந்துரு என்பவர் சுரேசை அடித்துக் கொன்று வீட்டு வாசலில் வீசி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரிடம் சந்துரு அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எனது தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயுடன் சுரேஷ் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. இது குறித்து பலமுறை எனது தாய் மற்றும் சுரேஷிடம் கண்டித்தேன். ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் குடிபோதையில் எங்களது வீட்டுக்கு வந்தார். அப்போது நான் வீட்டுக்கு வரக்கூடாது என்று மீண்டும் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் கல்லை எடுத்து போதையில் இருந்த சுரேஷை தாக்கினேன்.

    பின்பக்க தலையில் காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் உடனடியாக அருகில் இருந்த மினி ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சுரேஷ் குடி போதையில் இருப்பதாக கூறி, அவரையும், அவரது டூவீலரையும் ஆட்டோவில் தூக்கிப் போட்டு, நள்ளிரவு அவரது வீட்டு முன்பு உடலையும், மோட்டார் சைக்கிளையும் போட்டுவிட்டு தப்பிச் சென்றேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதை அடுத்து சந்துருவை போலீசார் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது.
    • இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் உழவர் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பொது மக்கள் வாங்கி செல்கி றார்கள்.

    இந்த நிலையில் தற்போது நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி பழங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கிலோ 10 ரூபாயாக சரிந்துள்ளதால், பொதுமக்கள் அதிக அள வில் வாங்கி செல்கின்றனர்.

    உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை விவரம்(ஒரு கிலோவுக்கு) வருமாறு:-

    கத்தரி ரூ.20 முதல் 36, தக்காளி ரூ.10 முதல் 14, வெண்டைக்காய் ரூ.40 முதல் 48, அவரை ரூ.40 முதல் 50, கொத்தவரை ரூ.36, முருங்கைக்காய் ரூ.36, முள்ளங்கி ரூ.16, புடலங்காய் ரூ.32 முதல் 40, பாகற்காய் ரூ.32 முதல் 36, பீர்க்கன்காய் ரூ.40 முதல் 48, வாழைக்காய் ரூ.24, வாழைப்பூ (1) ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ.20, பூசணி ரூ.25, சுரைக்காய் (1) ரூ. 5 முதல் 8, மாங்காய் ரூ.30, தேங்காய் ரூ.30, எலுமிச்சை ரூ.130, கோவக்காய் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் சி.வெங்கா யம் ஒரு கிலோ ரூ.25 முதல் 36, பெ.வெங்காயம் ரூ.16 முதல் 20, கீரை ரூ.30, பீன்ஸ் ரூ.90 முதல் 100, கேரட் ரூ.45 முதல் 50, பீட்ரூட் ரூ.36 முதல் 40, உருளைக்கிழங்கு ரூ.20 முதல் 24, சவ்சவ் ரூ.28, முட்டைகோஸ் ரூ.16 முதல் 20, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    கொய்யா ரூ.40 முதல் 50, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ.50, மல்லித்தழை ரூ.30, புதினா ரூ.30, இஞ்சி ரூ.120, பூண்டு ரூ.50, ப.மிளகாய் ரூ.40 முதல் 50, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ.30, மக்காச்சோளம் ரூ.30 முதல் 36, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 60, சேனைக்கிழங்கு ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.40, பப்பாளி ரூ. 30, நிலக்கடலை ரூ.50, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ரூ.50, மாம்பழம் ரூ.60, சப்போட்டா ரூ.40, தர்பூசணி ரூ.15, விலாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது.

    • பரமத்திவேலூரில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    • அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-கரூர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கவர்கள், கேரி பேக்குகளை மொத்த விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்ப டுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பைகளை, அதிக அளவில் கடை உரிமையாளர் விற்பனை செய்து வருவதாக நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக ளுக்கு, அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் அடிப்படையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் மணிவண்ணன் தலைமை யில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் சந்தானகிருஷ்ணன், வேலூர் பேரூராட்சி செயல் அலுவ லர் செல்வக்குமார், துப்புரவு ஆய்வா ளர் குருசாமி மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொண்ட குழுவி னர் நேற்று மாலை பரமத்திவேலூர் 4 ரோடு அருகே உள்ள வெங்க டசாமி (வயது 55) என்பவருக்கு சொந்த மான கடையில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்ட னர்.

    இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலி தீன் கவர்கள், கேரி பேக்கு கள், பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர் வெங்க டசாமிக்கு ரூ.25 அபராதம் விதிக்கப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பைகள், கப்பு கள் பேரூராட்சிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டு பாது காப்பான இடத்தில் வைக்கப் பட்டுள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், மீண்டும் விற்பனை செய்தால் கடை உரி மையாளருக்கு 2-வது தவணை யாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் வெண்ணிலா, கார்த்திக், சிவகாமி, சின்னதுரை ஆகி யோர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் சேவகனுர் பகுதியை சேர்ந்த வர் குருமூர்த்தி. இவருக்கும் இவரது தம்பி கார்த்திக் குடும்பத்தாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் குரு மூர்த்தி மனைவி சவுமியா (27) தன்னை கார்த்திக் குடும்பத்தினர் தாக்கியதாக தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெண்ணிலா, கார்த்திக், சிவகாமி, சின்னதுரை ஆகி யோர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 57), விவசாயி. இவர் கடந்த 26-ந் தேதி குடும்ப தகராறு காரணமாக அதே பகுதியில் உள்ள பள்ளக்காட்டு தோட்டத்தில், விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பி னும் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார்.
    • அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் அருகே கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    நேற்று வாழவந்தி அருகே உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டிற்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நிலையில் திடீரென அவர் தூக்குப் போட்டு கொண்டார்.

    இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது.
    • இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த‌ வர்கள் மான்குட்டியை பிடித்தனர். .

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது. இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த வர்கள் மான்குட்டியை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் வந்து மான்குட்டியை ஆவலு டன் பார்த்து சென்றனர்.

    பின்னர் மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த வனவர்கள் ரமேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மான்குட்டியை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்து வமனைக்கு கொண்டு சென்று நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

    இந்த மான்குட்டி இன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அரசாணை வழங்கிட வேண்டும்.

    மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வேண்டும்.

    2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது.
    • 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி வழங்க வேண்டும், பயணப்படி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்க ளுக்கான பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
    • பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவற்றை குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் சில வருடங்களாக வெண் பன்றி பண்ணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென இறந்தது. அங்கு சென்ற மருத்துவக் குழுவினர் அவற்றின் ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பண்ணையில் இருந்த பன்றி குட்டிகள் உள்பட 20 பன்றிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவற்றை குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பண்ணை இருந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிகாரிகள் உத்தரவுப்படி நேற்று கால்நடை துறையினர் 12 பேர், கவச உடை அணிந்து பன்றி பண்ணைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அந்த பண்ணையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழமான குழி தோண்டி, பன்றிகளை அழித்து குழிக்குள் போட்டு மூடினர். மேலும் பண்ணை அமைந்துள்ள பகுதி 1 வருடத்திற்கு தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அறிவிப்பு பேனரை அதிகாரிகள் வைத்து விட்டு சென்றனர்.

    • ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.

    அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×