search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spotted Deer"

    • வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அறுநூற்றுமலை பெலாப்பாடி கிராமத்துக்கு, வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தியுள்ளது. களைத்துப்போன இந்த மானை அதே பகுதியைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியை சமைத்து சாப்பிட முயற்சிப்பதாக சேலம் மண்டல வன பாதுகாவலர் ராகுல், ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து தும்பல் வனச்சரகர் விமல்ராஜ் தலைமையிலான வனத்துறையினர், பெலாப்பாடி கிராமத்திற்கு சென்று மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மாயவன், பாஸ்கரன், சண்முகம், கிருஷ்ணன், சரவணன், சிதம்பரம், ராஜேந்திரன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்து, கைது செய்யப்பட்ட 8 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தனர்.

    அருநூற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாட மாட்டோம் என வனத்துறையினர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றி கிராம மக்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கதாகும். 

    • கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
    • பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் கொலையனூரில் உள்ள தமிழ்நாடு அரசு முந்திரி காட்டிற்கு அருகே உள்ளது. நேற்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற ஜோதி அங்குள்ள பாழடைந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று உயிருடன் கிடப்பதை கண்டார். பின்னர் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் விழுந்த 3 வயதுள்ள புள்ளிமானை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அந்தமானை கொலையனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முந்திரி காட்டில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.



    • புள்ளி மான் இறந்தது.
    • மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அணைக்கரைப்பட்டி சாலையோர புதரில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை கள அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மானை மீட்டு சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

    அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் எஸ்.வி. மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக அதிக அளவில் மான்கள் தெரு நாய்களாலும், வாகனங்களில் அடிபட்டும் இறந்து வருவது அந்த பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    • கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது
    • மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பென்னக்கோணம் ரோட்டில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பி வேலியில் 5 மாத ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து ரஞ்சன்குடி எல்லைக்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெப்பைகுடிகாடு உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மங்களம் காப்புக்காடு பகுதியில் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது.

    • வேலியில் சிக்கி புள்ளிமான் பலியானது.
    • கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் இரை தேடி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடிய புள்ளிமான் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலி முள்ளு கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலர்கள் புள்ளிமான் உடலை கைப்பற்றி கால்நடை உதவியாளரால் பிரேத பரிசோதனை ெசய்து அதன் பின்னர் புதைத்தனர்.

    • தண்ணீர் தேடி வந்தது
    • வனத்துறையினர் விசாரணை

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் மற்றும் இரைத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் காப்புக்காட்டில் இருந்து வெளியில் வந்த புள்ளிமான், அப்பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது, அவ்வழியாக வந்த ெரயில் மோதி உயிரிழந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலமாக பிரேதப் பரிசோதனை முடித்து, அங்கேயே தீ வைத்து எரித்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது.
    • இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த‌ வர்கள் மான்குட்டியை பிடித்தனர். .

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது. இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த வர்கள் மான்குட்டியை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் வந்து மான்குட்டியை ஆவலு டன் பார்த்து சென்றனர்.

    பின்னர் மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த வனவர்கள் ரமேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மான்குட்டியை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்து வமனைக்கு கொண்டு சென்று நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

    இந்த மான்குட்டி இன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • அரசுக்கு சொந்தமான தேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே மா.கொளக்குடிபகுதியில் இன்று அதிகாலை 50 கிலோ எடை கொண்ட மான் ஒன்று பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் சிக்கியுள்ளது. வீராணம் ஏரியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. அது தற்பொழுது வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அதற்கு தங்குவதற்கு போதிய இடம் இல்லாததால் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. கடந்த ஒரு மாதமாக சுத்தி திரிந்த இந்த மான் தற்பொழுது வெறி நாய்கள் துரத்தியதில் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சம் அடைந்தது. இந்த மானை பொது மக்கள் பத்திரமாக பிடித்து வைத்து, வனத்துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். வனத்துறைக்கு தகவல் கொடுத்து சுமார் 3 மணி நேரம் ஆகியும் வனத்துறையினர் மானை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை.

    விரைந்து நடவடிக்கை எடுக்க வனத்துறை யினர் முன்வர வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று அலட்சி யம் காட்டும் வனத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதே போன்று அரசுக்கு சொந்த மானதேக்க மரங்கள் அதிக அளவில் குறைந்து வருகின்றன. இதற்கும் வனத்துறை என்ன செய்கி றது என்று தெரியா மல் போகிறது. காடுகளை வளர்க்கின்ற நேரத்தில் காடுகளை அழித்து வரும் குற்றவாளிகளை கண்ட றிந்து வனத்துறையி னர் தீவிரை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளர்.

    ×