ெரயிலில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு

தண்ணீர் தேடி வந்தது வனத்துறையினர் விசாரணை
ெரயிலில் சிக்கி புள்ளிமான் உயிரிழப்பு
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் உள்ள மான்கள் தண்ணீர் மற்றும் இரைத்தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோளிங்கர் காப்புக்காட்டில் இருந்து வெளியில் வந்த புள்ளிமான், அப்பகுதியில் உள்ள ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது, அவ்வழியாக வந்த ெரயில் மோதி உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலமாக பிரேதப் பரிசோதனை முடித்து, அங்கேயே தீ வைத்து எரித்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com