என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
- மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி கோழிப் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த நவ. 22-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 5.10 ஆக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று 30-ந் தேதி முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 15 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் ரூ. 4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
- வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துகாளிப்பட்டியை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த சதீஷ் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
- அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினரும், கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ், கபிலக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பழனிசாமி , ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். கூட்டத்தில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்படும் தினசரி அங்காடிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு தினசரி சந்தை என பெயர் வைத்து நினைவு வளைவு அமைக்க சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான 84 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து தீர்மானங்களின் மீது உறுப்பினாகள் பேசியதாவது:-
10-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் ராஜவேல்: 400 பஸ்கள் வந்து செல்லும் வசதி கொண்ட பஸ் நிலையம் இருக்கும்போது புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்படுவதாக அறிகிறோம். அதற்கு பதிலாக நகராட்சி இடங்களில் வணிக வளாகங்கள் கட்டினால் நகராட்சிக்கு வருமானம் வர ஏதுவாக இருக்கும்.
நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு: திருச்செங்கோடு நகரின் வளர்ச்சி நிலையையும் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் பஸ்கள் அதிகமாக உள்ளே நுழைவதால் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு இடம் தேர்வு நடந்து வருகிறது. தற்போது உள்ள பஸ் நிலையம் எப்போதும் போல் இயங்கி வரும்.
18-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ரவிக்குமார்: நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து பூமி பூஜைகள் போடும்போது நகர மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காததால் ஒரே திட்டத்திற்கு நகராட்சி நிதியும், எம்.எல்.ஏ. நிதியும் ஒதுக்கும் குழப்பமான சூழ்நிலை உருவாகிறது. எனவே இதனை அதிகாரிகள் கவனித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து சீர்படுத்த வேண்டும்.
20-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சண்முக வடிவு:
கூட்டப்பள்ளி பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே நிழற்குடை இருந்ததை அகற்றிவிட்டு தான் சாலை விரிவாக்க பணி நடந்தது. எனவே அதே இடத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜா: எனது வார்டு பகுதியில் நெசவாளர் காலனி பள்ளியில் 1500 மாணவிகள் படித்து வருகின்றனர். இது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி கல்வி நிதியிலிருந்து 6 வகுப்பறைகள் கட்டித்தர ஏற்பாடு செய்து தர வேண்டும்.
நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு: உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டத்தின்படி வரும் டிசம்பர் 8-ந் தேதி 1 முதல் 8 வார்டுகளுக்கு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் நகராட்சி தேவைகள் மட்டுமல்லாது அனைத்து துறைகள் சார்ந்த பட்டா மாறுதல், பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், தனி நபர் பிரச்சனைகள் என எதுவாக இருந்தாலும் மனு கொடுத்தால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய பதில் வழங்கப்படும். எனவே இது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் துண்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை 1 முதல் 8 வார்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் நகர்மன்ற உறுப்பினர்கள் வழங்கி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகர், கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் பரமத்தி வேலூர் பஞ்சமுக விநாயகர், பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையம் முதலியார் தெரு விநாயகருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேதாந்தபுரம் சித்தி விநாயகர், நகராட்சி அருகே உள்ள வெள்ளை பிள்ளையார் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
- குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் நகராட்சி சார்பில் சுள்ளிமடை தோட்டம் பொன் காளியம்மன் நகரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையில் நடை பெற்றது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் என்ஜினீயர் ராஜேந்திரன், எஸ்.ஓ.ராமமூர்த்தி, நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், தர்மராஜன், அழகேசன், கோவிந்தராஜன், ராஜ், சுமதி, கனகலட்சுமி, விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் குமார பாளையம் நகராட்சி பகுதி யில் தார் சாலை, தண்ணீர் தொட்டி, பொது கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். அப்போது அம்மன் நகர் முதல் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலை வரை உள்ள பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி தலைவரும், வடக்கு நகர தி.மு.க. பொறுப்பா ளருமான விஜய்கண்ணன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், நகர தெற்கு தி.மு.க. பொறுப்பாளர் ஞானசேகரன், கவுன்சி லர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
- 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.
அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
- மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (65). பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
இதுகுறித்து வேலூர் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
- கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை வகைகளை பயிர் செய்துள்ளனர்.
வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றி லைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளிகள் கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் இதனை பரமத்திவேலூர் - கரூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம் பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.7 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3500-க்கும் விற்பனை யானது. கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 500-க்கும், முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது.
நேற்று வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.ஆயிரத்து 500-க்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிக ரிப்பாலும், முக்கிய நிகழ்ச்சிகள் இல்லாததாலும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
- மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.800 வரை சரிவடைந்து ரூ.10ஆயிரத்து 200-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.12 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை குறைந்து ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது.
மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்ததால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டை சேடர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வக்கீல் பழனிசாமி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
பழனிசாமியின் மனைவி மணிமேகலை (65). நேற்று மாலை பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவரை பின்தொடர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சுக் கொடுத்து உள்ளார். அப்போது மாலை நேரங்களில் தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல. இவ்வாறு நகை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என அந்த வாலிபர் மணிமேகலையிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து மணிமேகலை அவர் அணிந்திருந்த 12 பவுன் நகை நகைகளை கழட்டி பையில் வைத்துள்ளார்.
ஆனால் அந்த வாலிபர் அப்படியே பையில் வைக்க வேண்டாம் எனக் கூறி அவரிடம் இருந்த ஒரு காகித பையை கொடுத்து நகையை வாங்கி கவரில் வைத்துள்ளார். இதைதொடர்ந்து அங்கிருந்து அந்த வாலிபர் மாயமானதாக தெரிகிறது. பையில் வைத்த நகைகளும் மாயமானது.
இந்த சூழ்நிலையை அறிந்து சுதாரித்துக் கொண்ட மணிமேகலை நகையை திருடி சென்றதாக கூச்சலிட்டு உள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த வாலிபர் சென்ற திசையில் தேடி பார்த்தனர். ஆனால் வாலிபர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மாலை நேரத்தில் மூதாட்டியிடம் தங்க நகையை நூதன முறையில் கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






