நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.90 ஆக நிர்ணயம்

கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.4.90 ஆக நிர்ணயம்
Published on

நாமக்கல்:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ஒரு முட்டை விலை ரூ.4.75 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில் இம்மாதம் 4-ந்தேதி 5 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆனது. 5-ந்தேதி மேலும் 5 காசுகள் உயர்ந்து ரூ.4.85 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் விலை மீண்டும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com