சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தவர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சி

சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
கட்டிட மேஸ்திரி சதீஷ் மீது கார் மோதிய காட்சி.
கட்டிட மேஸ்திரி சதீஷ் மீது கார் மோதிய காட்சி.
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பிற்படுத்தப்பட்டோர் காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (42). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று ராசிபுரம் கடைவீதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துகாளிப்பட்டியை சேர்ந்த ஒருவர் வேகமாக ஓட்டி வந்த கார் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் சதீஷ் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த சதீஷ் நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com