நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம்
Published on

நாமக்கல்:

இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com