என் மலர்
நாமக்கல்
- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
- கணவனை மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30). இவர்களுக்கு ஜனஸ்ரீ (13), கவின் ஸ்ரீ (7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 5-ந் தேதி இரவு, மோகன்ராஜ் அவரது வீட்டில் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் அவரது மனைவி, மகன்களும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் மறுநாள் காலையில் மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, மோகன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், மோகன்ராஜ் மனைவி கீர்த்தனாவுக்கு, கதிரேசன் (25) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கீர்த்தனா மற்றும் கதிரேசனை போலீசார் பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வரகூர்கோம்பை பகுதியை சேர்ந்த கதிரேசனுடன், கீர்த்தனாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதனை அறிந்து மோகன்ராஜ், இருவரையும் கண்டித்தார். இதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மோகன்ராஜை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கதிரேசன், கீர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு, மோகன்ராஜ் வீட்டின் அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து அதை மோகன்ராஜ் உடலில் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்தனர். பின்பு மோகன்ராஜ் தற்செயலாக இறந்ததாக கூறி கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மோகன்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து, மர்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், கீர்த்தனா மற்றும் கதிரேசனை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
- கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், கண்டிப்பாளை யம், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.
தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்கா யைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்ற னர்.
அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சி ரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்க ளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டி யல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது. தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி யால் விவசா யிகள் கவலை அடைந்து ள்ளனர்.
- வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும்,
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளை யம், ஓலப்பாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி, கற்பூரி போன்ற வெற்றிலை ரகங் களை பயிர் செய்துள்ள னர்.
வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது, கூலி ஆட்கள் மூலம் வெற்றி லைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், 104 கவுளி கொண்ட ஒரு சுமை யாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிக ளுக்கு வரும் வியாபாரிக ளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவே லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் - கரூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க் கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் வெள்ளைக் கொடி வெற்றிலை இளம்ப யிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்துக் கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயி ரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.1500-க்கும் விலை போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்ப யிர் சுமை ஒன்று ரூ.4ஆயி ரத்து 500-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.
வெற்றிலை வரத்து குறைந்த தும், கோவில் கும்பாபிஷேகங்கள் மற்றும் திருமண முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும்.
- நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில், 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ள பழங்குடியின மாணவிகளின் மேற்படிப்பிற்காக, இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட, நர்சிங் பயிற்சி மையங்களில், நர்சிங் டிப்ளமோ படிப்பில் (Diploma in General Nursing and Midwifery Course) சேர்க்கை பெற்று, தொடர்ந்து 3 ஆண்டுகள் படிப்பதற்கு செலவாகும் கல்வி கட்டணம், புத்தகக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், சீருடைக் கட்டணம் மற்றும் இதர கட்டண செலவினங்கள் ஒரு மாணவியருக்கு ரூ.70,000 ஆகும். இந்த கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும்.
எனவே 2023-2024-ம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவிகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறும் வகையில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் சேர்க்கை பெற்று, அதன் விபரத்தை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், கொல்லிமலை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலயகவுண்டம் பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக பரமத்திவேலூர் வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்க ளும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்திற்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஊரகப் பகுதிக்கு என 8 உறுப்பினர்களும் நகர்ப்புற பகுதிக்கு என 4 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதியானவர்கள். இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும்.
வேட்புமனுக்களை நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் செல்வக்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரகப் பகுதிக்கான உதவித்தேர்தல் நடத்தும் அலுவலராக உதவி திட்ட அலுவலர் செல்வி நிய மிக்கப்பட்டுள்ளார். நகர்ப்பு றத்தில் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்கு நர்(தணிக்கை) உமா மற்றும் பேரூராட்சி மாவட்ட ஊராட்சி செயலர் ரவிச்சந்தி ரன் ஆகியோர் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்களின் வேட்புமனுவினை தாக்கல் செய்யலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 12-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு பரிசீ லிக்கப்படும். வேட்புமனு வினை திரும்ப பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், அதற்கான அறிவிப்பை 14-ந்தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவித் தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் வழங்கலாம்.
தேர்தல் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆல யத்தில் விநாயகப் பெரு மானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அபிஷேக ஆராதனை முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர்.
- தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல்:
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவங்கள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில், எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி., ராஜூ தலைமையில், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி, இன்ஸ்பெக்டர் அம்பிகா, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் காரணமாக, மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாத பார்கள், சந்துக் கடைகள் பெருமளவில் குறைந்துள்ளன. இருந்தும், ஆங்காங்கே ஒரு சில சந்துக் கடைகளில், கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மோக னூர் அடுத்த ஆண்டாபுரம் பகுதியில், கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில், மோகனூர் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையி லான போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் மளிகை கடை நடத்திவரும், தி.மு.க கிளை செயலாளர் குமரவேல் (42) என்பவர், தனது கடையில் கள்ளத் தனமக மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மளிகை கடையில் இருந்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
- 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், இழப்பீடு வழங்கக்கோரி உத்தர விடப்பட்ட வழக்குகளில் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார்கள் இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இவ்வாறு வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு பணம் செலுத்தாமல் உள்ள 200-க்கும் மேற்பட்ட வர்களுக்காக, வருகிற 15-ந் தேதி நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் நடைபெறும் சமரச மையம் மூலம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நோட்டீஸ் சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை பணம் செலுத்தாததால் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்களும், மேல்முறையீடு செய்த வர்களும் சமரச பேச்சு வார்த்தைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் 15-ந் தேதி நடை பெறும் சமரச பேச்சு வார்த்தைக்காக வக்கீல்கள் பரமத்திவேலூர் ராம லிங்கம், திருச்செங்கோடு பாலசுப்ரமணியம், நாமக்கல் அய்யாவு, குமரேசன், சதீஷ்குமார், முரளி குமார், அந்தோணி புஷ்பதாஸ் மற்றும் சந்திரசேகர் ஆகி யோர் மத்தியஸ்தர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஏற்கனவே 10 வழக்கு களில் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்காத நபர்களை கைது செய்யக் கோரி உத்தரவிட்ட வழக்குகளில் நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் களுக்கு அனுப்பப்பட்ட கைது வாரண்டின் நிலை என்ன என அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி டாக்டர் ராமராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், பிரிவு 72 -படி நுகர்வோர் கோர்ட் உத்தரவுகளை அமல்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க நுகர்வோர் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 3 வாரங்களுக்கு முன்னர் நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் என்பவருக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ.55 ஆயிரத்துக்கான காசோ லையை சம்மந்தப்பட்ட நுகர்வோருக்கு நீதிபதி டாக்டர் ராமராஜ் வழங்கினார்.
- குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன.
- விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப் பட்டறைகள் உள்ளன.
குமாரபாளையம்:
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்ட றைகள் உள்ளன. இவை களில் விசைத்தறி மற்றும் கைத்தறி ரகங்களுக்கு தேவையான நூல்களுக்கு சாயம் போடப்படுகிறது. இவைகளில் அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள், அனுமதி பெறாத சாயப் பட்டறைகள் உள்ளன.
அனுமதி பெற்ற சாயப்பட்டறைகள் உள்ளிட்ட அனைத்தும் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்துதான் வெளியேற்ற வேண்டும் என மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் சிலர் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீரை அப்படியே காவிரி ஆற்றில் கலக்க விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, பொக்லைன் உதவியுடன் ஆலையை அகற்றி வருகின்றனர். மேலும் மின் இணைப்பும் துண்டித்து வருகின்றனர். இதுவரை அனுமதி பெறாத 7 சாயப்பட்டறைகள் அகற்றப்பட்டுள்ளன.
இது குறித்து சிறு சாயப் பட்டறைகள் சங்க தலைவர் பிரபாகரன் கூறியதாவது:-
சாயப்பட்டறை பிரச்சி னைக்கு தீர்வு காண, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருவது மகிழ்ச்சி.
இருப்பினும் அதற்குள் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து கை சலவை செய்யும் சிறு சாயப்பட்டறைகளை குறி வைத்து இடித்து வருவது வருத்தத்திற்குரியது.
இது போன்ற சிறு சாயப்பட்டறைகளை இடித்தால், நகரில் விசைத்தறி பட்டறைகளுக்கு தேவையான நூல்கள் சாயமிட முடியாத நிலைமை ஏற்படும். ஜவுளி உற்பத்தி பாதிக்கும். ஆகவே சிறு சாயப்பட்டறைகளை குறி வைக்காமல், கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதாக மெசின்கள் வைத்துக் கொண்டு, சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் உதவி பொறியாளர் உதயன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
- மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பயணியர் மாளிகையில் அமைச்சர் கே.என்.நேரு மரக்கன்று நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.ஈஸ்வரன், திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்தில் 1,800 வேம்பு மரக்கன்றுகளும், 1,800 புங்கன் மரக்கன்றுகளும், 2,000 வசந்த ராணி மரக்கன்றுகளும், 1,700 பாதணி மரக்கன்றுகளும், 1,700 நாவல் மரக்கன்றுகளும், 1,500 நீர்மருது மரக்கன்றுகளும், 1,500 அத்தி மரக்கன்றுகளும் என மொத்தம் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.
மேலும், பருவமழைக்கு முன்பாகவே அனைத்து மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, உதவி கோட்டப்பொறியாளர் தமிழரசி, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் கணேசன், உதவி பொறியாளர்கள் சுதா, சையது ரசீம் ஆகியோர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அங்காள பரமேஸ்வரி, அகோர வீரபத்திரன், முருகன் மற்றும் மதுரைவீரன் சுவாமி கோவில்களின் முப்பூஜை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி மாலை சாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மாப்பூஜை மற்றும் பூம் பூஜையும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையத்தில் அங்காள பரமேஸ்வரி, அகோர வீரபத்திரன், முருகன் மற்றும் மதுரைவீரன் சுவாமி கோவில்களின் முப்பூஜை திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி மாலை சாமியை காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லுதலும், மாப்பூஜை மற்றும் பூம் பூஜையும் நடைபெற்றது.
5-ந் தேதி காலை பொங்கல் பூஜையும், இரவு 12 மணிக்கு இருளப்ப பூஜையும் நடைபெற்றது. 6-ந் தேதி காலை வீரபத்திரசாமி அக்னி கொப்பரை தாங்கி ஊர்வலமாக செல்லுதலும், மாலை பேச்சியம்மன் பூஜையும், பேச்சியம்மன் புள்ளப் பாவாடை, பூக் கொப்பரையுடன் சாமி ஊர்வலமும் நடைபெற்றது.
7-ந் தேதி மாலை பொங்கல் பானையுடன் பதுவிற்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி, இரவு 12 மணிக்கு காடேறும் பூஜையும் நடைபெற்றது. நேற்று கிடா விருந்தும், இன்று காலை பொங்கல் பூஜை மற்றும் அன்னதானமும், இரவு மஞ்சள் நீராடல் மற்றும் சாமி ஊர்வலமும் நடைபெறுகிறது.
நாளை(சனிக்கிழமை) மதுரை வீரன் பூஜையும், நாளை மறு நாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை சாமியை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் புதுப்பாளையம், அங்காளபரமேஸ்வரி கோவில் முப்பூஜை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






