என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் தாலுக்கா, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம், பொடங்கம் கிராமம், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம், கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு கீழ்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றும் வரும் தூர்வாரும் பணியினையும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என நீர்வளத்துறை செயற்பொறியாளரை கண்காணிப்பு அலுவலர் வலியுறுத்தினார்.

    • பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
    • தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 4-வது வார்டு வெள்ளாளர் தெரு பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தூய்மைப்பணி முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் அன்பரசு பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்,வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட் டவர்கள் இதில் பங்கேற்றனர்.

    அவர்கள் ஒன்றாக இணைந்து பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்கு கள் மற்றும் மின் இணைப் புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளும், வார்டு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 46-ம் ஆண்டு பேரவைக் கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். பொருளாளர் ராசப்பன் வரவு, செலவு கணக்கினை சமர்ப்பித்தார்.

    சங்க நிறுவனரும், கவுரவத் தலைவருமான நடராஜன் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராஜா, பொய்யேரி மற்றும் கொமராபாளையம் வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். ஏற்கனவே தூர்வாரப்பட்ட வாய்க்கால்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள மண்ணை வாய்க்கால் கரையிலேயே வாகனங்கள் செல்லும் வகையில் சீர் செய்ய வேண்டும்.

    வெற்றிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே பொத்தனூரில் நன்கு செயல்பட்டு வந்தது. அதை மீண்டும் பரமத்திவேலூர் பகுதிக்கு கொண்டு வர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை, பகவதி அம்மன் கோவிலில் முன்பு பல மாதங்களாக உரிமையாளர்கள் யார் என்றே, தெரியாமல் வெளி மாநில கார்கள் மற்றும் சரக்கு மினி ஆட்டோக்கள் நிற்கிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். வரும் நாட்களில் பள்ளி திறக்கும்போது இந்த வழியாக தனியார் பள்ளி பேருந்துகள் வந்து, செல்லும். வீதிகளில் இருபுறமும் 4 சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் பள்ளி வாகனம் சென்று வருவதில் சிரமம் ஏற்படும்.

    மேலும் இரவு நேரத்தில் கார்களின் மறைவில் மர்ம நபர்கள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவது வழக்கமாக உள்ளது. கடந்த வருடம் இதே போல் வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த உரிமையாளர்களை போலீசார் எச்சரித்து வாகனத்தை எடுக்கச் செய்தனர்.

    இந்த நிலையில், இப்பகுதியில் நிற்கும் வாகனங்களுக்கு ஆர்.சி மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இல்லை என தெரிகிறது. இப்பகுதி மக்களுக்கு இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்றே தெரியவில்லை.

    எனவே பரமத்திவேலூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுல்தான்பேட்டை பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
    • டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் அம்மாணி கொண்டலாம்பட்டி அரசமரத்து கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 66). இவர் இன்று காலை சைக்கிளில் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, ஆத்தூரில் இருந்து கொண்டலாம்பட்டி நோக்கி வந்த டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக சண்முகம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து டேங்கர் லாரியை ஓட்டி வந்த, தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பொம்மிடியை சேர்ந்த இளமுருகன் (62) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வெறி நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் நாய் கடியால் குழந்தைகளும், பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வீசாணம் பஞ்சாயத்து, விட்டப்ப நாயக்கம்பட்டி கிராமம், ராசா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன், விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி இரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் தாக்கியதால், பாஸ்கரனுக்கு சொந்தமான 29 ஆடுகள் மற்றும் 5 கோழிகள் இறந்துவிட்டன.

    அவரது தோட்டத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழி தோண்டி, இறந்த ஆடுகள் மற்றும் கோழிகள் புதைக்கப்பட்டன. பாஸ்கரன் குடும்பத்தினர் ஆடு வளர்ப்பை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். 29 ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன.
    • சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரிகளும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை கிராமம் நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம் பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வந்தன. சட்ட விதிகளுக்கு மாறாக அனைத்து குவாரி களும் இயங்கி வருவதாகவும், இதனை தடை செய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இவை அனைத்தும் ஜனவரி மாதம் குத்தகை காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து குவாரிகளும் அரசின் கட்டு ப்பாட்டில் சென்றுள்ளது. இந்த குவாரியில் மழை நீர் மற்றும் அனைத்து கிணறுகளிலிருந்து வரக்கூடிய ஊற்று நீர் தேங்கி நிற்பதால்

    இதனை கல்குவாரியின் உரிமையாளர்கள் எம்சாண்ட், பி சான்ட், உள்ளிட்டவை களுக்கு பயன்படுத்த தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வருகின்றனர்.

    இதனால் தங்களது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் இது குறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழ்நிலையில் இப்பகுதி விவசாயி ராமசாமி என்பவரது தோட்டத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 20 பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும். குடிநீர் திருடப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, திருச்செங்கோடு பொறுப்பு டி.எஸ்.பி. முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் பச்சமுத்து, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, கிராம நிர்வாக அலுவலர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட நேரில் வந்து போராட்டத்திலொ ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து குவாரிகளில் இருந்த மோட்டார்களை அப்புறப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றியதால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

    • விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
    • தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த விவசாயி களுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

    அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்றளிப்பு துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிக ளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் கிரைன்ஸ் என்ற வலைத ளத்தில் விவ சாயிகளுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவரம் உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்கப்பட்டு வலைதளங்க ளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் அந்தந்த கிரா மங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலு வலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய வற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு விப ரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு வரு வாய்த்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே இனிவரும் காலங்க ளில் விவசாயிகள் மானியம், சலுகைகள் மற்றும் பேரிடர் நிவாரணம் சம்பந்தமாக இழப்பீடுகள் பெற இயலும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்தி வேலூர்:

    ஒடிசா மாநிலம் ஸ்ரீ சண்டன்பூர் பகுதியை சேர்ந்தவர் சுடரசன்சாகு (வயது 51). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவர் பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டி கடைக்கு சென்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.
    • சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலையில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு விதைப்புக்கு தேவையான சோளம், சாமை மற்றும் நிலக்கடலை, பயிறு வகைப் பயிர்களான உளுந்து மற்றும் பாசிப்பயிறு விதை கள் கபிலர்மலை வட்டார வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சோழசிரா மணி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கையிருப்பு உள்ளன.

    எனவே மேற்கண்ட விதைகள் தேவைப்படும் கபிலர்மலை வட்டார விவசாயிகள் தங்களின் நில சிட்டா மற்றும் ஆதார் நகல் கொண்டு வந்து தங்கள் சாகுபடிக்கு தேவையான விதையினை மானிய விலை யில் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள லாம் என தமிழக வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    • முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கபிலர்மலை யில் பிரசித்தி பெற்ற பா லசுப்பிரமணிய சாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்க டவுள் கோவில், பாண்டமங்க லம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில், பிலிக்கல்பாளையம் விஜய கிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடை யாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், திருவேலீஸ்வ ரர் கோவிலில் உள்ள சுப்ர மணியர், ராஜா சாமி கோவி லில் உள்ள ராஜா சாமி, சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யம்பாளையம் ராஜா வாய்க்கால் அருகே உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பர மத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முரு கப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் பாலப்பாளையத்திலிருந்து பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட்டு வரும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறி யாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராசிபுரம் புறவழிச்சாலை அமைக்கும் பணியினையும் அவர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ராசி புரம் உட்கோட்டம் குருசாமி பாளையம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு, பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் குணா, ராசி புரம் நெடுஞ்சாலை கட்டு மானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×