என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண் அடுக்கு திட்டம்"
- விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான அடங்கல் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
- விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கை மாறியுள்ளன.
திருப்பூர் :
மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தில் நில உடமை பயன்பாடு உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது :- வேளாண் அடுக்கில் விவசாயிகள் இணைக்கப்படுவதன் மூலம் விவசாய நில பயன்பாடு குறித்த தெளிவான தகவலை பெற முடியும்.இத்திட்டத்தில் இணைய விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான அடங்கல் உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க வேண்டும். பல இடங்களில் விவசாய நிலங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் கை மாறியுள்ளன. அவர்கள் அந்த நிலங்களை விற்கக்கூடும்.அத்தகைய நிலம் குறித்த விவரங்களை பதிவு செய்ய தயங்குகின்றனர்.பல இடங்களில் கூட்டுப்பட்டாவில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பல இடங்களில் குடும்பத்தகராறு நிலவுகிறது.
அவர்களுக்கான நில பயன்பாடு விவகாரம் நீதிமன்ற வழக்கிலும் உள்ளன. அத்தகைய நிலத்துக்கு யார் உரிமையாளர் என்பது உறுதியாகாத நிலையில் வேளாண் அடுக்கு திட்டத்தின் கீழ் கொண்டு வருவதில் சட்ட சிக்கல் உள்ளது.ஒரு ஊரில் நிலம் வாங்கியுள்ள பலர் வெளியூர்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்கள் நிலம் பராமரிக்கும் பொறுப்பை வேறு சிலரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அவர்களது நிலங்களை ஆவணப்படுத்துவதும் சிரமமான காரியமாக உள்ளது.நில வரையறை தொடர்பான அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை வருவாய்த்துறையினர் தான் வழங்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான இடங்களில் சில விவசாய நில உரிமையாளர்கள் அருகேயுள்ள வருவாய்த்துறை, ஓடை புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ளனர்.தங்கள் நில விவரங்களை ஆவணப்படுத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் கைநழுவி போகும் என்ற அச்சத்தால் பலரும் இத்திட்டத்திற்குள் இணைய தயக்கம் காட்டுகின்றனர்.
வேளாண் அடுக்கு திட்டம் வெற்றிகரமாக செயல்பட வருவாய்த்துறையினரின் பங்களிப்பு முக்கியம் என்ற நிலையில் திட்டம் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆதார் எண் மூலம் பணம் பரிமாற்றம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் பயிர்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் அடுக்குத் திட்டம் மற்றும் கணக்கெடுப்பு ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கிரைன்ஸ் என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து பயிர்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்காக எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இதில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.
மேலும் ஆதார் எண் மூலம் பணம் பரிமாற்றம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் பயிர்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, தாசில்தார் சுகுமார், பஞ்சாயத்து தலைவர் சங்கரன், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கதிரவன், ஊராட்சி செயலாளர் பரந்தாமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது.
- தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த விவசாயி களுக்கு மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
அதன்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்றளிப்பு துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிக ளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் கிரைன்ஸ் என்ற வலைத ளத்தில் விவ சாயிகளுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவரம் உள்ளிட்ட விவரங்களை சரி பார்க்கப்பட்டு வலைதளங்க ளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிரா மங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலு வலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய வற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு விப ரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு வரு வாய்த்துறை மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே இனிவரும் காலங்க ளில் விவசாயிகள் மானியம், சலுகைகள் மற்றும் பேரிடர் நிவாரணம் சம்பந்தமாக இழப்பீடுகள் பெற இயலும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.






