என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலத்தில் வேளாண் அடுக்கு திட்டம்
    X

     காரிமங்கலம் வட்டாரத்தில் விளைநிலத்தில் பயிர் கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

    காரிமங்கலத்தில் வேளாண் அடுக்கு திட்டம்

    • ஆதார் எண் மூலம் பணம் பரிமாற்றம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
    • இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் பயிர்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பந்தாரஅள்ளி ஊராட்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் அடுக்குத் திட்டம் மற்றும் கணக்கெடுப்பு ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக கிரைன்ஸ் என்ற வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அனைத்து பயிர்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இதற்காக எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. இதில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.

    மேலும் ஆதார் எண் மூலம் பணம் பரிமாற்றம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளின் நிலங்கள் மற்றும் பயிர்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, தாசில்தார் சுகுமார், பஞ்சாயத்து தலைவர் சங்கரன், வருவாய் ஆய்வாளர் மணி, கிராம நிர்வாக அலுவலர் கதிரவன், ஊராட்சி செயலாளர் பரந்தாமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×